பக்கம்:இரவு வரவில்லை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
viii

அடிகளில், தமதாசான் பாவேந்தர் பாரதிதாசனர் காட்டிய அன்புள்ளம் - தாயுள்ளம் தழைக்கக் காட்டியுள்ளார் கவிஞர் வாணிதாசர்.


உள்ளத்தை நெகிழ வைத்து உடலை உருக்கி அறிவு ஒளியைப் பெருக்கும் ஆற்றல் உடைமையே தமிழ் மொழியின் தனிச் சிறப்பாகும். இரங்கலுக்கு எடுத்துக் காட்டாக உலக மொழிகளிலே இடம் பெற்றது தமிழ். காந்தியார், கலைவாணர், தருமாம்பாள், பிச்சையா, பாரிப்பாக்கம் கண்ணப்பர் ஆகிய ஐவர் பிரிவின் துயரால் எழுந்த கையறுநிலைக் கவிதைகள் இரங்கல் தமிழுக்கு எடுத்துக்காட்டாய் இலங்குகின்றன.


பக்கம் ஐந்தில் ‘மான் பாய’ என்றிருப்பதை ‘மீன் பாய’ என்றும், பதினேழில் ‘மறைந்தாயோ’ என்றிருப்பதை ‘மறந்தாயோ’ என்றும், இருபத்து நான்கில் ‘மலர்ந்து’ என்றிருப்பதை ‘மலர்ந்தது’ என்றும், இருபத்தொன்பதில் ‘உயிர்கொடுத்தான்’ என்றிருப்பதை ‘உயிர்கொடுத்தாள்’ என்றும், முப்பத்திரண்டில் ‘விட்டாய்’ என்றிருப்பதை ‘விட்டாள்’ என்றும், முப்பத்தொன்பதில் ‘மெல்லிசை’ என்றிருப்பதை ‘மெல்லிடை’ என்றும், நாற்பதில் ‘மணைக்க’ என்றிருப்பதை ‘மணக்க’ என்றும், நாற்பத்து மூன்றில் ‘5’ என்றிருப்பதை ‘1’ என்றும், ஐம்பத்தேழில் ‘பகலெலாம’ என்றிருப்பதை ‘பகலெலாம்’ என்றும், எழுபதில் ‘வாகுயர்த்தி’ என்றிருப்பதை ‘வாடுலர்த்தி’ என்றும், எழுபத் தேழில் ‘பான்பிறந்த’, ‘மண்டிதமாமணி’ என்றிருப்பவைகளை ‘வான்பிறந்த’, ‘பண்டிதமாமணி’ என்றும் திருத்திப் படிக்க வேண்டுகிறாம்.


கற்பவர் இதயம் களிக்கும் வகையில் இதனைப் படைத்தளித்த கவிஞர் வாணிதாசனார்க்கும், விற்பனை உரிமையை விரும்பி ஏற்கும் மனோன்மணி புத்தக நிலையத்தார்க்கும் அன்பு கலந்த நன்றி.

-ஐயை பதிப்பகத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/9&oldid=1180156" இலிருந்து மீள்விக்கப்பட்டது