பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விண்வெளியில் மனிதன்

97


அதன் வேகம் தணிக்கப்பெறும்; இதனால் அது சந்திரனைச் சுற்றியுள்ள ஓர் அயனப் பாதையில் நுழையும். 1958ஆம் ஆண்டு அக்டோபர் 11இல் வீசியெறியப் பெற்ற பயனியர்-1 தன்னுடைய பாதையினின்றும் வழி விலகியது. ஆனால், அது திரும்பவும் பூமியின் வளி மண்டலத்தால் பின்னோக்கி இழுக்கப்பெறுவதற்கு முன்னர் 70,700 மைல் வான்வெளியில் பிரயாணம் செய்தது. இரஷ்ய அறிவியலறிஞர்கள் 760 இராத்தல் எடையுள்ள லூனிக்-12 என்ற

படம் 39: லூனிக்-1, லூனிக்-11 இவற்றின்
அயனப் பாதைகளைக் காட்டுவது.

துணைக்கோளை மிகச் சரியான பாதையில் அனுப்பி வெற்றி கண்டனர். அது சூரியனைச் சுற்றியுள்ள அயனப் பாதையில் நுழையத் தொடங்குவதற்கு முன்னர் 4,600


2. லூனிக் என்பதி, அமெரிக்கர்கள் இரஷ்யர்களின் சந்திர மண்டல வெளி ஆராய்ச்சிக்குத் தந்த சாட்டுப் பெயர் (nickname).

இ-7