பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விண்வெளியில் மனிதன்

99


எறிந்தது. இது தான் மனிதன் முதன் முதலாக விண்வெளியிலுள்ள மற்றொரு பொருளின்மீது பருப்பொருள் தொடர்பு கொண்டதாகும். அதே ஆண்டு அக்டோபர் 14 இல் ஒானிக் III என்ற துணைக்கோள் மிக விரிந்த ஓர் அயனப்பாதையில் வீசியெறியப்பெற்றது. அந்த அயனப்பாதை சந்திரனைச் சுற்றியும் சென்றது. அங்ஙனம் செல்லும் வழியில் தானாகவே ஒரு சில ஒளிப்படங்களை

படம் 41: லூனிக்-III என்ற துணைக்கோள் பூமியினின்றும்
பார்க்க முடியாத சந்திரனின் மறுபுறத்தின் சில படங்களை எடுத்தல்

எடுத்து, அவற்றை உருத்துலக்கி (Develop)த் திரும்பவும் தொலைக்காட்சிச் சாதனத்தின்மூலம் 300,000 மைல்கட்கு அப்பாலுள்ள பூமிக்கு அனுப்பின. இந்த மிகப் பெரிய அருஞ்செயல் பூமியினின்றும் எப்பொழுதும் மறைந்துள்ள