பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

இராக்கெட்டுகள்


கின்றன. இராக்கெட்டு விமானம் வளி மண்டலத்தின் அடர்த்தியான அடுக்குகளினூடே உராய்ந்து செல்லும் பொழுது அது கிட்டத்தட்ட 1800° F அளவுக்குச் சூடேறு கின்றது. இந்த வெப்பத்தைச் சில உலோகங்களே தாங்கக் கூடியவை. விமானம் பழுக்கக் காய்ச்சிய இரும்பு போன்று செந்நிறத் தோற்றமளிக்கின்றது. இராக்கெட்டு விமானம் இரண்டு அடுக்குகளுடன் கூடிய உலோகங்களால் கட்டப் பெறுவதால் அஃது உள்ளே இருக்கும் விமானிகளை அவ்வளவாகப் பாதிப்பல்லை. தவிரவும், விமானிகளும் வேறு பணியாளர்களும் இருக்கும் அறைகள் காப்புறை (Insulation) அமைக்கப்பெற்றுக் குளிர்ச் சாதன வசதிகள் செய்யப்பெற்றுள்ளன. இதனால் இராக்கெட்டு விமானிகள் பாதிக்கப் பெறாமல் தப்பி விடுகின்றனர்.

தொழில் நுணுக்க அறிவு வேகமாக முன்னேறி வரும் இக்காலத்தில் வெப்பத்தினைத் தாங்கி நிற்கக் கூடிய புதுப் புது உலோகக் கலவைகள் கண்டறியப்பெற்றுள்ளன. டைட்டேனியம் (Titanium) போன்ற உலோகங்கள் அதிக வெப்பத்தினைத் தாங்குவதால் அது மணிக்கு 1000 மைல் வேகத்தில் செல்லும் விமானத்தில் பயன்படுகின்றது. இராக்கெட்டுகளில் பல உயர்ந்த கலவை உலோகங்கள் பயன்படுகின்றன. இராக்கெட்டின் வடிவமும் காற்றினைக் கிழித்துச் செல்லக் கூடியவாறு அமைக்கப்பெறுகின்றது. இதனால் அது சூடேறுவது குறைகின்றது.

இன்னொரு யுக்தி முறையாலும் சூடேறுவது குறைக்கப்பெறுகின்றது. இராக்கெட்டு விமானம் கீழிறங்கி அடர்த்தியான காற்றடுக்குகளினூடே செல்லும்பொழுது அதன் வேகத்தைப் படிப்படியாகக் குறைத்துக் கீழிறக்கப் பெறுகின்றது. அது காற்றின் அடர்த்தியான அடுக்குகளின்