பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

இராக்கெட்டுகள்


பெறுகின்றது. பிறகு மூன்றாவது இராக்கெட்டு சுடப்பெறுகின்றது. அஃது எரிந்து முடியும் சமயத்தில் அதன்மீது வைக்கப்பெற்றுள்ள பொருள் (எ-டு. துணைக் கோள் )சுடப் பெறுகின்றது. இப்பொருளே பூமியைச் சுற்றி வருகின்றது. இராக்கெட்டுகள் பூமியில் விழும் இடங்களை இராடார் (Radar) என்ற கருவிகளால் கண்டறிகின்றனர்.

படம் 21; பல நிலை ரொக்கெட்டின் தத்துவத்தை விளக்குவது.
எவரெஸ்டுக்குச் செல்லும் முயற்சியும் பல நிலை இராக்கெட்டின்
அமைப்பும் படத்தில் ஒப்பிட்டு விளக்கப்பெற்றுள்ளது.

உயர்ந்த மலைச்சிகரத்தின்மீது ஏறுவோர் கையாளும் துறை நுணுக்கத்தை (Technique) அறிந்து கொண்டால் பல நிலை இராக்கெட்டின் தத்துவம் தெளிவாகப் புலனாகும். சர் ஜான் ஹண்ட் குழுவினர் 1953 இல் இளவேனிற் காலத்தில் (Spring) எவரெஸ்டுக் கொடுமுடியின் உச்சியை