பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. ஏவுகணைகள்

ர் ஏவுகணையையும் (Missile) ஓர் இராக்கெட்டையும் பொதுமக்கள் ஒன்று எனக் கருதுகின்றனர். அது தவறு. ஏவுகணை என்பதற்குப் பகைவன்மீது எறியப்பெறுவது, அல்லது உத்தரவுப்படி பகைவன் மீது பாய்வது என்பது பொருள். அது துப்பாக்கியினின்றும் சுடப்பெறுவதன்று. அது தானாகவே இயங்கவல்லது. பெரும்பாலும் ஓர் ஏவுகணை இராக்கெட்டினைக்கொண்டே செலுத்தப் பெறுகின்றது. ஆனால், அஃது ஒரு ஜெட் இயந்திரமாகவும் இருக்கலாம்; அல்லது முன் தள்ளியுடன்கூடிய ஒரு சாதாரண விமான இயந்திரமாகவும் இருக்கலாம். ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணை (Guided missile) என்பது, விமானம் பறக்கும்பொழுது செலுத்தப்பெறக் கூடிய ஏவுகணையாகும். ஓர் உந்து ஏவுகணை (Ballistic missile) என்பது அது வானத்தில் செல்லும் முதல்நிலையில் விசையினால் எதிர்த்து வீசியெறியப்பெறுவதாகவும், அதன் பிறகு அது வீசி யெறியப்பெறும் பாறைபோல் பிரயாணம் செய்வதாகவும் உள்ள ஓர் ஏவுகணையாகும்.

முதன் முதலாகச் செருமானியர் அமைத்த வி - 2 போன்ற இராக்கெட்டுகள் ஒருவகை பீரங்கிப்படையாகவே கருதப்பெற்றன. அவை தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்குவதில் துப்பாக்கிகளைவிட நீண்ட எல்லையிலும், அதிக மான திருத்தத்திலும் இயங்கக் கூடியவை என்று மக்கள் நம்பினர். பிறகு எதிர்-விமான-ஏவுகணைகள் (Anti-aircraft-missile) வந்தன. இவை விமானத் தற்காப்புப் பணிகளில் துப்பாக்கிகள் இருந்த இடத்தைப் பெறத் தொடங்கின. விமானத்தின் மூலம் வீசியெறியப்பெறும் சிறு ஏவுகணைகள்