பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

இராக்கெட்டுகள்


(Bombs) போலவே இலக்குகளை நோக்கிப் பாய்கின்றன.. முன்னதாகவே அறுதியிடப்பெற்ற ஓர் எல்லையில் அவை தம்முடைய இறக்கைகளையும் பொறிகளையும் கழற்றிவிடுகின்றன ; அதன் பின்னர் அவை குதிகொடைகள் மூலம்

படம் 24: வானினின்றும் நீரின்கீழ்ச் சுடப்பெறும் ஏவுகணை

நீரினுள் இறக்கப்பெறுகின்றன ; பின்னர்க் குதிகொடைகளையும் கழற்றிக் கொண்டு டார்ப்பிடோக்களைப்போலவே இலக்குகளைத் தாக்குகின்றன. (படம் 24 ஐப் பார்க்க.)

4. தரையினின்றும் வானத்திற்குச் சுடப்பெறும் ஏவுகணைகள் ; இவை சாதாரணமாக இராம்ஜெட் (Ram jet) என்ற ஒருவகை ஊர்திகளால் தரையின்மீது அல்லது கப்பல்களின்