பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

இராக்கெட்டுகள்


ஏற்ற காற்றழுத்தம் மூன்று மைல் உயரத்தில் பாதியாகக் குறைந்து விடுகின்றது. மலே ஏறுவோரும் வானூர்தி கடவுவோரும் இதனை நன்கு அறிவர். இரண்டு மைலுக்கு மேலே காற்றினைச் சுவாசிப்பது சிரமம். வானூர்திகளைக் கடவுவோர், 10,000 அடிக்குமேல் செல்ல நேரிடுங்கால் தம்முடன் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லுகின்றனர்.

எனினும், வீழ்மீன்கள் (Meteors), பிற மூலங்கள் இவை மூலம் நம்முடைய வளிமண்டலம் 600 மைல்கட்கு மேலும் பரவியுள்ளது என்பதற்குச் சான்றுகள் கிடைக் கின்றன. நம்முடைய வளிமண்டலம் பல அடுக்குகளாக (Layers) நிலைபெற்றிருப்பதர்க அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர். ஒவ்வோர் அடுக்கும் அதற்கடுத்த அடுக் கினின்றும் முற்றிலும் வேருக உள்ளது என்றும் அவர்கள் மொழிகின்றனர்.

தாமாகப் பதிவு செய்து கொள்ளும் ஒளிப்படக் காமிராக்கள், வெப்பமானிகள், பாரமானிகள் போன்ற பல கருவிகளைப் பலூன்கள், இராக்கெட்டுகள் இவற்றில் அமைத்து நாம் வாழும் காற்றுக்கடலின் உயரமான பகுதிகளே அறிவியலறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர். சுமார் 130 மைல் உயரத்தில் காற்றின் எதிர்ப்பிநாள் கேரிடக்கூடிய காற்றுத்தடை (Air resistence) முழுதும் மறைந்து விடுகின்றதாகச் சொல்லப்படுகின்றது. ஏறக் குறைய 300 மைல் உயரத்தில் வெற்றிடம் (Vacuum world of space) தொடங்கி விடுகின்றதாகக் கருதலாம். இப்பொழுது வளிமண்டலத்தை நான்கு அடுக்குகளாகப் பிரித்துக் கூறுகின்றனர் அறிவியலறிஞர்கள்.

பூமிக்கு அருகிலுள்ள அடுக்கினை அடிவளி மண்டலம் (Troposphere) என வழங்குகின்றனர். இது கடல் மட்டத்