பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூமியின் தணைச்கோள்கள்

85


காரணமாக இந்தப் பீரங்கியினின்றும் படுக்கை மட்டமாகச் சுடப்பெறும் வெடி குண்டு (Slhell) விரைவில் பூமியின் மீது விழும். வெடிகுண்டின் வேகம் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக இருக்கின்றதோ அஃது அவ்வளவுக் கவ்வளவு அதிக தூரம் பிரயாணம் செய்த பிறகே பூமியின் மீது விழும். அதனுடைய நேர் வேகம் அல்லது வேகம் மிக அதிகமாக இருந்தால் வெடிகுண்டின் பாதையின் வளைவு (Curvature) பூமியின் வளைவினுடன் பொருந்தும். இந்நிலையில் வெடிகுண்டு பூமியை அடையாது. ஆனால், அந்தக் குண்டு 200 மைல் உயரத்தில் பூமியைச் சுற்றி விழுவதில் தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கும்.

அது கிட்டத்தட்ட வினாடிக்கு ஐந்து மைல் வீதம் (மணிக்கு 18,000 மைல் வீதம்) செல்லும்பொழுது பூமியின் கவர்ச்சி ஆற்றலுடன் சமனிலையாகி விடுகின்றது. இந்த வேகத்தில் அது கீழே விழாது, அது பூமியைச் சுற்றி அயனப் பாதையில் (Orbit) பிரயாணம் செய்துகொண்டிருக்கும். எனினும், பூமிக்கு 200 மைலுக்குமேல் 600 மைல் வரையிலும் கூடச் சில காற்றுத் துகள்கள் உள்ளன; இக் காற்றுத் துகள்கள் மனிதனால் படைக்கப் பெற்றுள்ள இந்தச் செயற்கை துணைக்கோளின் வேகத்தை மட்டுப்படுத்தும். 600 மைலுக்கு அப்பால், காற்றின் உராய்வே இல்லாத வெளியில், இத்தகைய செயற்கைத் துணைக்கோள் காலவரையறையின்றி அயனப்பாதையில் செல்ல வேண்டும். செயற்கைத் துணைக்கோளின் வேகம் வினாடிக்கு ஐந்து மைலுக்குக் கீழ்க் குறைக்கப் பெற்றால், அது பூமியின் கவர்ச்சி ஆற்றலால் கவரப்பெற்றுக் கீழே விழுந்து விடும். அத்தகைய ஒரு பொருள் பூமியின் வளி மண்டலத்தினூடே விழும்பொழுது அது காற்றின் மீது உராய்வதால் ஏராள