உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூமியின் துணைக்கோள்கள்

87


பெற்றுள்ள ஒரு வழிகாட்டி அமைப்பினால் கட்டுப்படுத்தப் பெற்று ஒரு புறமாகச் சாயத் தொடங்கியது. அதன் பிறகு அது பூமியின் மேற்பரப்பிற்கு 45° சாய்வில் மணிக்கு 4.500 மைல் வீதம் பிரயாணம் செய்து முதல் நிலை மோட்டார் நின்று கீழே விழுந்தது.

படம் 38: ஸ்புட்னிக் - I.

இந்நிலையில் அதன் வேகத்தைத் தணிக்கும் வளிமண்டலம் இல்லை : இப்பொழுது இரண்டாம் நிலை மோட்டார் இயங்கி அதன் வேகத்தை 11, 250 மைலிலிருந்து 12,500 மைல் வரை விரைவாக முடுக்கி விட்டு அதுவும் கழன்று விழுந்தது. அதன்பிறகு தன்னுடைய மூக்கின் மீது சிறிய ஸ்புட்னிக்கைச் சுமந்து கொண்டிருந்த மூன்றாவது (இறுதி) நிலை மோட்டார் ஓர் ஆற்றலற்ற வளை