பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 53

பொதுமகள், பரத்தை, அறிவுடையோர் மனைவியை விடுத்துப் பெ து மகளிர் கையினைப் பிடியார் என்பது வெளிப்படை. முத்தாரம் ஆன வ ைமுத்துமாலை அணிந்த மலை என்றது முலையை ; எத்தாலும் - எதனாலும்; தேவடி - இனிய மாவடு, கண். வடி ஆள் கரம் - கண்னை மறைத்த கை .

工O4

அலைக்கணை யிட்ட பெருமானுக் கன்ப ன டையலரைச் சிலைக்கனே தொட்டுவெல் சீராச ராசன் றினமளிக்கும் மலைக்கணை யுற்றரி திற்றெளி வுற்ற மடந்தையர்தாம் தலைக் கணே யில்லாமற் பாய்மாத் திரங்கொடுத்தா ரென்னே யே.

அலை கடல்; அலைக்கு அணை இட்டபெருமான் - கடலில் அனை கட்டிய இராமன்; அடையலர் - தம்மைச் சேராத பகைவர்; சிலைக்கனை தொட்டு - வில்லில் அம்பைத் தொடுத்து. அளிக்கும் - காக்கும்; மலைக்கு அனைவுற்று - மலையிலே பொருந்தி; அரிதின் தெளிவுற்றமிக அருமையாகத் தெளிவுபெறற: மடந்தையர் - பெண்டிர்; தலைக் Ա :յի Ա l இல்லாமல் பா ப் மாத்திரம் கொடுத்தார் - படுப்பதற்குப் பாயும் தலையணையும் வேண்டும்; தலையனை யைத் தரா மல் பாய் மாத்திரம் தந்தால் என்ன பயனாம். தலைக் கணை - முகத்தில் பொருந்திய அம்பு ஆகிய கண் : பாய்மா - எழுச்சியுற்ற யானை, முலை:

திரம் - உறுதி .

105

மண் காட்சி கொள்ள மதமா வுகைத் து வரும் பவனி எண் காட்சி செப்யும் பருவத் தெழுவர்க்கு மின்பமயல் பண்காட்சி மிக்கவன் சீராச ராசன், பருவரையிர் கண்காட்சி யில்லா மலைவளத் தார்க்குங் களிப்பில்லையே.

மண் காட்சி கொள்ள - உலகத்தார் எல்லாரும் காண, மதமா யானை; பவனி - வீதியுலா எண்காட்சி செய்யும் - எளிதாகக் கானும் வகையில் வரும். பருவத்து எழுவர் - பேதை , பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் எழுவகைப் பருவ மகளிர். இன்ப மயல் - இன்ப மயக்கம்; மயல் பண் காட்சி மிக்கவன் - மயக்கம் தரும்படியான அழகு படைத்தவன்; கண்காட்சி இல்லா மலைவளம் - பார்வைக்கு எட்டாமல் இருக்கிற மலைவளம்: