பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இராசராச சேதுபதி

139

சோ2னயுங் கான மெனப்பொழி பாற்கரன் றேன் றன் மறச் சேனேயின் விறு முடையான் கிழவன் றிருமரபோன் ஏனைய வேந்தர் புகழ்ராச ராச னிருங்கிரியீர் தானே யும் யானே யும் விட் டவர் கோல்கையிற் றங்களிதே

சோனை - சோனாமாரி, விடாமழை; கானம் என - மழையில்லா ப் பாலை என்னும்படி : பொழிபாற்கரன் - பொன்னையும் பொருளையும் தரும் பாற்கரன்; மழையினும் மிகுகொடையாள ன் என்பது கருத்து

வீறு - செருக்கு, பெருமிதம்; கிழவன் - கிழவன் சேதுபதி, மாபோன்வழிவந்தவன்; ஏனை வேந்தர் - பிற மன்னர் தானை காலாட்படை யானை - யானைப்பட்ை; விட்டவர் - போற்றிப் பேணாது விட்டவர்; கோல் - செங்கோல்; செங்கோல் கையில் தாங்கரிது - செங்கோல் தாங்கி அரசாள்வது இயலாது; பட்ை பல மில்லாதவர் அரசு நிலைபெறாது. தானை - ஆடை, யானை - யானைத் தந்தம் போன்ற முலைகள்: கோல் கையில் தாங்களிது - அம்புபோன்ற கண்ணைக் கையால் மறைத்து நிற்றல் இயலாது; உடுக்கை இழந்தால் கை சென்று எடுத்து மானம் காத்தல் இயல்பு என்பதாம்.

140

பாண்பாகச் செவ்வி மதுரம் பொழிக்திசை பாணர்க்கன் பு பூனபால சூரியன் சீராச ராசன் பொருப்பனையிர், மாண்பாகக் காட்டானே யுங்காட்டி கிற்கு மதியுடையீர் காண்பாரைக் காட்டா மறைத் தலென ைேவிக்கடி பொழிற்கே.

பாண்- பாட்டு; பாகச் செவ்வி - ஏற்ற அழகு; மதுரம் - இனிமை; இசைப்பாணர் - பாட்டிசைப்பதில் வல்ல பாணர்; பால சூரியன் - உதய சூரியன்; மாண்பு - பெருமை; காட்டானை - காட்டில் வாழும் யானை, மதியுடையீர் - அறிவு படைத்தவரே. காண் பாரை - பார்ப்பவர்களை: காட்டா - காட்டுப்பசு; காட்டானையைக் காட்டியவர் காட்டுப்பசுவை மறைத்தது என்ன காரணம்; மாண்பாக - சிறப்பு விளையும் வண்ணம்; காட்டு ஆனை - காட்டு ஆனை ஒத்த முலை; காண்பார் - காண்கின்ற ஆற்றல் படைத்த சண்களை; காட்டா மறைத்தல் - வெளிப்படுத்தாமல் கைகளால் மூடி மறைத்த தன்மை; கடிபொழில் - வாசனை பொருந்திய சோலை.