பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இராசராச சேதுபதி

147

படையொன் றிலாது பகைவேந்த ரோடக்கண் பார்த்துககும் விடையொன்று வீரர்க் கிறைராச ராசன் மிளிர் கிரிவாய் இடையொன் றிலாது துதிக்கை யுடையது மிங்கிருக்க இடையொன் றுடைய பழியிற்கை வைத்தற் கேதுவென் னே.

- படை ஒன்று இலாது பகை வேந்தர் ஒட - பகைவர் தாம் கொண் டிருந்த ஆயுதங்களைப் போட்டுவிட்டுப் புறமுதுகிட்டு ஒட கும் - இகழ்ந்து சிரிக்கும் ; விடை ஒன்று வீரர் - காளை போன்ற பெருவீரர்; மிளிர் கிரி - ஒளிவிட்டு விளங்கும் மலை; இடை - துன்பம், இடையீடு, நடு. துதிக்சையுடையது - புகழ்வதற்குரியது; துன்பம் ஒன்றும் இல்லா மல் புகழ்வதற்குரியதாகிய நல்ல சொற்கள் இருக்க; இடை ஒன்றுடைய பழியில் கைவைத்தல்-துன்பம் சேர்க்கும்படியான இகழ் சொற்களை மேற் கொள்ளுதல்; ஏது - காரணம்;.இடை ஒன்று இலாது - இடையீடு சிறிதும் இல்லாது; துதிச் கையுடையது - தும்பிக்கையுடைய யானைத்த ந்தம் போன்ற முலை; ஒன்றோடொன்று நெருங்கியிருக்கும் தன்மையால் இடைவெளியில்லாதாயிற்று. இடை ஒன்று உடைய பழி - ஒன்று என்னும் எண்ணின் குறி க’ இடை க ஒன்று பழி - பகழி ; அதாவது அம்புபோன்ற கண்களில் கை வைத்து மறைத்தற்குக் காரணம் என்ன எனபதாம.

148

அளிக்கையி னுைல கேந்திநிற் பான் வண் டருந்திமதுத் துளிக்கை யருமுல்லைச் சீராச ராசன் சுரும்பினில்யாம் ஒளிக்கை யுடையா. ரொளிக்காது காட்ட வுடம்படலாற் களிக்கையிைேடிடை யீடின்றிக் கற்றனம் கண்டனமே.

அளிக்கையினால் - கொடுக்கின்ற கையினால், கொடைத் திறத் தால்; உலகு ஏந்தி நிற்றல் - உலகைக் காப்பாற்றி, நிலைபெற்றிருக்கச் செய்தல் மதுத் துளிக்கை - தேன் சிந்துகை: சுரும்பு - மலை; ஒளிக்கை யுடையார் ஒளிக்காது காட்ட உடம்படலால் - மறைக்குமியல்புடையார் மறைக்காமல் விளக்கிக் காட்டச் சம்மதித்ததால், களிக்கையினோடு இடையீடு இன்றிக் கற்றனம், கண்டனம் - மகிழ்ச்சியுடன் தடையின்றிக் கற்றோம்; பொருளையும் உணர்ந்தோம். . ஒளிக்கையுடையார் . ஒளிபடைத்த கண்ணைக் கையில் கொண்டவர்; ஒளிக்காது காட்ட