பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 75

உடம்படல் - முலைகளை மறையாது வெளிப்படக்காட்ட ஒருப்படலால்; கல் தனம் - மலை போன்ற முலை; கண்டனம் - பா ர்த்தோம்.

149

போரை முகை மதிக்குர் தறுகண்மை பூண் மறவர் சீரைமு னுக்குஞ் செயதுங்க ராயன் செழுங் குடியிற் பாரைமு னுக்கிய சீராச ராசன் பருப்பதத் தீர் தாரைமு னகத் தனந்தரி னன்குசந் தானமுண்டே.

முனா. க - முன்னாக, முதன்மையாக, மதிக்கும் போற்றும்; தறுகண் - அஞ்சாமை; சீரை முனாக்கும் - சிறப்புகளை முற்படச் செய்யும். மேன்மையுறச் செய்யும்; செயதுங்கராயன் - வெற்றி படைத்த மன்னன்; பாரை - உலகத்தை, தன்கீழ் வாழும் குடிகளை: பருப்பதம் - மலை: தாரை முனாக - எக்காளம் முன்னால் ஊதிச் செல்ல; தனம் தரின் - செல்வம் தந்தால்; நன்கு சந்தானம் உண்டே பெரிதும் உயர்ந்த இடமுண்டாகும். தாரை முனாக - கண்ணின் முன்னிலையில்; .Esזכת 5 קנה5 דנג மறைத்துக் கொண்டுள்ளமையினால் கண் முன்பாக என்றார்; தனம் - முலை; சந்தானம் உண்டே - சந்ததி உண்டாகும்.

150

அல்ஜலயும்வெல்பொலந் தேவையு மங்கையா டானையையும் புல் ஆலயும் காக்கின்ற சீராச ராசன் பொரு ப்பனை யீர் சொல்லையும் வேழபா கென விதிப் பீருந் தோலையளித் தெல்லையு மீக்கொண்ட சேலையுங் கைக்கொளியல்பென்னையே.

அல் - இரவு; பொலந்தேவை - பொன்மயமான ஒளிபடைத்த தேவை என்னும் இராமேச்சுரம்; மங்கை - உத்தரகோசமங்கை, ஆடானை - திருவாடானை, புல்லை - திருப்புல்லாணி; தேவை. மங்கை, ஆடானை, புல்லை என்னும் நான்கும் தெய்வத்தலங்கள் இத் திருப்பதிகளையும் இங்குள்ள தேவாலயங்களையும் பரிபாலிப்பவன்; சொல் - பேச்சு, வேம் பாகு - வேகின்ற இனிய வெல்லப்பாகு, விதிப்பீர் - வழங்குவீர்; நோல்உடம்பு, யானை: எல் - சூரியன்; மீக்கொண்ட மேம்பட்ட சூரியன் ஒளியினும் விஞ்சிய; சேலை - உடுத்திருக்கும் ஆடை,தோலை- யானைத் தந்தம் போன்ற முலைகளை சேல் - கெண்டைமீன்: மீன்போன்ற கண். கைக்கொள்திறம் - கைப்பற்றிய தன்மை; கையால் மறைத்த தன்மை .