பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 127

போர்ப்பால் - பாரதப்போரில்; பொர - போர் செய்யும்படி; தேர்ப் பர்கன் - தேர்ப்பாகனாக இருந்த கண்ணன், பா ர்த்தசாரதி. நேர்ப்பாக - முயற்சியாக, சிறப்பாக: முயற்சியுடன் தம்மொத்த பிறரைச் சேர்ந்து நிலைபெற்றிருந்தாலும் தம்மை ஆதரிப்பவரையே ஆதரிப்பர்; தம்மை நோக்காத மற்றையாரை யார்தாம் இவ்வுலகத்தில் கவனிப்பர் என்பது வெளிப்படை. பார்ப்பார் - நோக்குபவர், ஆதரிப்பவர். நேர்ப்பு ஆகத் தம் ஒத்த வரை அடைந்து நிலைக்கொளினும் - நேர்த்தியாக ஒன்றோ டொன்று ஒத்துக் காணும் மலைபோன்ற முலைகளைப் பெற்று நிலையாக நிற்பினும்; பார்ப்பாரை - கண்திறந்து பார்ப்பாரை; பாரார் . கண்ணை மன்றத்துப் பாராதவர்; பாரிடம் - உலகம்.

230

ப்ாபத்தைப் போக்குக் தனுக்கோடி காவலன் பாவலர்சங் தாபத்தைத் தீர்ப்ப்வன் சீராசர்ாசன் றடங்கிரிவாய்த் தீடத்தை வெல்லொளி யாய்நல்ல கோவினைத் தேடுமெற்குக் கோபத்தை மிக்க பகடளித் தாயுன் கொடைமைகன்றே.

பாவலர் - பாவில் வல்ல புலவர்; சந்தாபம் மனத்துயரம்; தடங்கிரி . பெரிய மலை; தீபம் - விளக்கு; கோ - பசு, கண்; கோபத்தை மிக்க . சினம் மிகுந்த பகடு . எருது, காளை, நல்ல பசுவைத் தேடுகிற எனக்குக் கோபம் மிகுந்த காளையை அளித்தாய்; உன் கொடை மிக நன்றாயிருந்தது; பொருத்தமின்று என்பதா ம். கோவினைத் தேடும் எற்கு - கண்ணை விரும்புகிற எனக்கு; கோபம் - ஒருவகை ஆடை கோபத்தை மிக்க - மேலாடையைவிட்டுப் பொங்கி வெளிப்பட்ட பகடு யானை, முலை. கொடைமை - கொடைத்தன்மை.

281

மதுக்கோடி லாதுல கம்புரக் கின்றவன் வஞ்சகரை யனுக்கீடி லாப்புகழ்ச் சீராசராச னணிவரைவாய்த் தநுக்கோ டிய துன்கை வந்து மலையா சலம்வரலால் இனிக் கூட லும்வரு மன்பின்வை கைமட்டு. மீந்திடினே.

மறுக்கோடிலாது - மநுநீதி தவறா மல்: புரக்கின்றவன் - காப்பவன்:

அனுக்குதல் வருத்துதல்; ஈடு இலாப் புகழ் ஒப்பு இல்லாப் பெரும் புகழ்: மலையாசலம் - மலையமலை, பொதியமலை; கூடல் - மதுரை: