பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 129

அல்குலினை யுடையவர்; படம் - யானை முகபடாம்; படம் இல்லார் - முகபடாத்திற்கு இருப்பிடமானவர்; யானை, அதாவது முலை. கடல் - கண் ; கடல்போன்ற கண் கையகத்துப் பொருந்தியதனால்.

2G4

கற்றன மென்பது கல்வி யதன்பய னல்லொழுக்கென் றுற்றன சொல்லி யுயர்புல வோரை யுயிர்த்துணையாப் பெற்றன கிைன்ற சீராச ராசன் பெருங்கிரிவாய்க் கற்றன மென்பதென் குைங்கண் மேயின கையருக்கே.

நற்றனம் என்பது கல்வி - சிறந்த செல்வம் என்று சொல்லப்படுவது கல்வியே, கல்வியின் பயன் நல்லொழுக்கமாகும்; உற்றன - நேர்ந்தவை. ஏற்புடையவை; உயிர்த்துணை - நெருங்கிய நட்பு: உற்றுழி உதவும் நண்பன். கற்றனம் என்பது என்னா கும் - படித்தோம் என்பதனால் என்ன பயனாகும்; கண்மேயின கையர் - செருக்கு மிக்க கீழோர் ; கல் தனம் மலைக்கு ஒப்பாம் முலை; கண் மேயின கையர் - கண்னைப் பொருந்தின. கையையுடையவர்.

265

புட்மொன்று பொன்னைப் பொருந்தவத் தோர்கள் புக வருந்த

இடமொன்று சத்திரம் பன்னு றமைத்தா ரிருங்குலத்து த் திடநின்ற கற்பகஞ் சீராச ராசன் றிருமலையில் விடமின்றி காகம் விடுத்தலி னேர்பய மேவலனே.

புடம் ஒன்று பொன் - நெருப்பில் புடமிடப் பெற்ற மாற்று உயர்ந்த பொன்; பொரும் - ஒக்கும்; புகவு அருந்த உணவு உண்ண இடம் ஒன்று சத்திரம் - இடம் பரந்த அன்ன சத்திரம்; சேதுபதி குலத்தார் நூற்றுக்கணக்கான அன்னசத்திரம் கட்டி வைத்தோராவர். திடம் நின்ற கற்பகம் - வலிமையொடு நின்ற கற்பகமரம் போல் கொடையாளன்: விடம் - நஞ்சு, கண்: நஞ்சில்லாமல் பாம்பை விட்டதனால் பொருந்திய பயனைப் பெற்றிலேன் என்பது வெளிப்படை. நாகம் - பாம்பு மலை : நஞ்சு போன்ற கண் இல்லாமல் மலை போன்ற முலையை விடுத்ததனால் சரியான பயன் கிட்டவில்லை என்றவாறு.

17