பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 171

திங்கள் - முழுமதி, பூர்ணச் சந்திரன்; கலைவாணர் அவை - பல கலைகளிலும் வல்ல புலவர் நிறைந்த சபை, கண்மணி என - கண்ணின் கருமணி என்று போற்ற: சொற்றிறம் - சொல்லின் நயம்; நரேந்திரன் - மக்களின் தலைவன், அரசன், மணியின்றி யானை வெளிப்படுத்தா ரிலை - மணி கட்டாமல் யானையை வெளியில் விட்டாரில்லை என்பது வெளிப்படை , தம் கண் மணி இன்றி - தம்முடைய கண்பார்வை இல் லாமல்; யானை - முலை.

BG2

தலையா லுலகு தொழுந்த நுக் கோடித் தலைவனன் பின் வலையா லெனப்பிணித் தோன்ராச ராசன் வளர்கிரியீர் மலேயா சலத்தொ டகத்திய ைைர மருவினர்க்கும் உலையாத மாக்கடல் கையேந்த லாமென் றுணர்ந்தனமே

உலகு - உலகத்தார், ஆகுபெயர்: மலையாசலம் - மலையமலை, பொதியமலை; இது அகத்தியனார் இருப்பிடம்; மலைய மலையோ டு அகத்தியனாரைச் சேர்ந்தவர்க்கும் அகத்தியனார் கடலைக் கையில் அடக் கியதுபோல், கெடாத பெரிய கடலைக் கையில் எந்தலாம் என்று வர்ந் தோம் என்பது வெளிப்படை ; உலையாத - கெடாத; மாக்கடல் பெரிய கடல்; மலையாசலம் - முலைக்கு ஒப்பு: அகத்து இயல் நாரை - மார் பிலே பொருந்திய கச்சினை, மருவினர் - பொருந்தியவர்; அகத்து இயல் நாரை மருவினர் என்றது தனங்களைக் குறித்தபடி, மாக்கடல் - பெரிய கடல் ஒத்த கண்.

BGB

குறும்பு த ைவென் றெழுபது பாளையக் கொற்றவரும் பெறும்பத விக்குத் தகவரி சைப்படி பேணிவனங்

குறும்பத தாமரை யான் ராச ராச னுயர்வரைவாய் - எறும்பி தனைத்தெரி வித்தோற் றேனே யெடுத்தனையே.

குறும்பு - பகைவர்; பாளையம் - அரசனுக்குப் போரில் உதவ வேண்டும் என்னும் நிபந்தனையுடன் வீரக்குடியினர்க்கு விடப்பட்ட நிலம்: கொற்றவர் - தலைவர்; வரிசைப்படி - தங்களின் பதவி வரிசை முறையில்: எறும்பி - எறும்பு, எறும்புக்குக் காட்டி நல்ல தேனைத் தேர்ந்தெடுத்தாய் என்பது வெளிப்படை, எறும்பி - யானை, முலை; தேன் - வண்டு, கண் ; எடுத்தனை - கண்ணைக் கையில் பெற்றாய்; கையால் மறைத்தா ய்

என்றவாறு ,