பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧVΙ இராசராசேசுவர சேதுபதி

'மகாராஜா அவர்கள் புலவர்களுக்கு எத்தனையோ வகையான சம்மா னங்களை அளித்து வருவதை உணர்ந்திருக்கிறேன். பொன் னாடை வழங்கியிருக்கிறீர்கள்; தோ டா அணிவித்திருக்கிறீர்கள்: நிலம் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் இன்று எனக்குச் சமஸ் தானத்தையே வழங்கி விட்டீர்கள்' என்றார். மன்னா நிமிர்ந்து பார்த்தார், 'ஆம்; என் அருகில் அமர்ந்து சமமான ஸ்தானத்தையே வழங்கிவிட்டீர்களே!' என்று ஐயரவர்கள் விளக்கிய போது மன்னருக்கு உண்டான உவகைக்கு எல்லையே இல்லை. அரசரோடு என்னைச் சரியாசனம் வைத்ததாய் என்று காளமேகம் சொன்னது பொய்யாகுமா?’ என்று மறுபடியும் கூறி, அந்த உவகையைப் பின்னும் மிகுதியாகச் செய்தார் ஐயரவர்கள்.

சிறிது நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். முதிர்ந்த பிராயத்திலும் தம் மீதுள்ள அன்பினால் இத்தனை நேரம் காத்திருந் தாரே என்ற பரிவு மன்னருக்கு ஏற்பட்டது. கடிகாரத்தைப் பார்த்தார். அந்தக் குறிப்பை அறிந்த ஐயரவர்கள். 'போதும் ஆனது; பேசினது போதுமானது' என்று சொல்லி எழுந்தார். "

அரசர் அமைச்சர் ஆவதா ?

மற்றுமொரு நிகழ்ச்சி. பனகல் ராஜா மந்திரி சபை அமைத்தபொழுது இராசராசேசுவர சேதுபதி மந்திரியாவதற்கு வாய்ப்பிருந்தாலும் மந்திரி யாகவில்லை. சேதுபதி மன்னருக்கு அது வருத்தத்தை உண்டாக்கியது. அச்சமயம் சேதுபதியைப் பார்க்க உ. வே. சாமிநாதையர் சென்ற பொழுது அரசரைப் பார்க்கத் தாம் விரும்புவதாகச் சொன்னார்.

ஐயரவர்கள் உள்ளே சென்றார். அரசர் முன் அமர்ந்தார். அரசர் வரவேற்றாலும் இயல்பான முகமலர்ச்சி இல்லை. ஐயரவர்கள் அமர்ந்த வுடனே, ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன் ' என்றார். அரசர் அவர் பேசியது விளங்காமல் தலையை நிமிர்ந்து பார்த்தார். ராஜாவுக்கு டி-ப்ரமோஷன்” ஆகவில்லையாம். அதுபெரிய சந்தோஷ சமாசாரம் அல்லவா மந்திரி ராஜா ஆனால் முறை. ராஜா மந்திரி யாவது பதவிக்குறைவு அல்லவா ? அந்தக் குறைவு தங்களுக்கு ஏற்பட வில்லையாம். தாங்கள் எப்போதுமே ராஜா அல்லவா என்றார். இதைக் கேட்டவுடனே துயரத்தில் ஆழ்ந்திருந்த அரசர் முகத்தில் விளக் கேற்றினாற் போலச் சிரிப்புப் படர்ந்தது.

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - ------

  • கி. வா. ஜகந்நாதன் : சேதுபதிகளும் தமிழ்ப்புலவர்களும் சில

துணுக்குகள். (இராமேஸ்வரம் மகாகும் பாபிஷேகச் சிறப்பு மலர். 1975)