பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧΧΙΙ இராசராசேசுவர சேதுபதி

செந் தமிழ்ப் புலவர்க்கு சி சேதுபதி கடிதங்கள்

இராகவையங்கார் இராசராசேசுவர சேதுபதியின் ஆசிரியரும் அவைக்களப் புலவரும்கூட. சேதுபதி வித்துவானுக்கெழுதிய கடிதங்களில் அடியேன் ராஜேசுவரன்' என்றும் தங்கள் மாணாக்கன் ராஜராஜே சுவரன்' என்றும் எழுதியிருத்தலைக் கொண்டு ஆசிரியர்பால் இவர் வைத் திருந்த பெருமதிப்பை அறிந்து கொள்ளலாம். இராகவையங்கார் தாயார் மறைவுகுறித்துச் சேதுவேந்தர் எழுதிய கடிதம் பின்வருமாறு:

அரண்மனை,

இராமநாதபுரம்,

24–10—21.

பிர்மபூர் உ. வே. வித்வான் ஸ்வாமி அவர்கட்கு, நமஸ்கார விஞ்ஞாபனம். T.

தங்களின் மிக்கவன்புள்ள அன்னையவர்கள் நேற்றிரவு உயிர் நீங்கினார் என்பதை இப்போதுதான் கேள்வியுற்று அவர்களின் உயர்ந்த குணாதிசயங்களை எண்ணி விசனமுற்றேன். நீண்ட அனுபவமும் சமஸ்தானத்தின் கவுரவமுமறிந்தார் அவர்கள் போன்று பிறர் இல்லையென்றே சொல்லலாம். எனது வண்டியின் ஓசை மாத்திரத்தால் எழுந்து நிற்கும் பெருமை என் மனக் கண்ணினின்றும் மாறாது. எனது சரீர அசெளக்கியத்தால் நேரில் வந்து எனது ஆறுதல் மொழிகளைக் கூறுதற்கு இயலாதவனாயுள்ளேன். தாயை இழக்கும் துக்கத்திலும் பிறிது ஒரு துன்பம் உண்டோ ? ஆயினும் ஏற்பட்ட காரியங்கள் குறிப்பிடப்பட்ட காலத்தே நடைபெறவேண்டு மென்பது தங்களினும் அறிந்தவர் யாரோ ? எனது மனப்பூர்வமான ஆறுதல் மொழிகளை அங்கீகரிக்கப் பிரார்த்திக்கிறேன்.

தங்கள்பால் வணக்கமுள்ள, பி. ராஜராஜேஸ்வரன். வெ ண் பா வே நீதர்

வெண்பாப்பாடுவதில் இராசராசேசுவர சேதுபதிக்கு மிக்க விருப்பு மிருந்தது. 1916 ஆம் ஆண்டு நாட்குறிப்பு (டைரி) ஒன்றை இவர் மகா வித்துவ னுக்கு வழங்கி முன்பக்கத்தில் கீழ்க்கண்டுள்ள வெண்பாவையும் எழுதினார்.

' வரும்வருடம் சென்ற வருட மதினும்

அரிய நலன்கள் அளிக்க - உரிமையுடன் மந்தமிலாச் செந்தமிழ்தேர் மகா வித்து வானுக்குத் தந்ததிந் தப்புத்த கம். '