பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. கமலையா ΧΧΧΙΙ !

மகா வித்துவான் தம் அரசரின் ஆசுகவித்திறமையைப் புலப்படுத்த விரும்பினார். நவராத்திரி விழாவிற்கு வந்த புலவர் பெருமக்கள்கூடிய பேரவையில் நடந்த அடிகள் நமக்கு' என்ற ஈற்றடியைக் கொடுத்துப் பாடி முடிக்குமாறு சேதுவேந்தரை வேண்டினார். சில நிமிடங்கள் சித் தித்த பிறகு பலரும் வியந்து பாராட்ட அரிய வெண்பா வைச் சேதுபதி டா டினார்.

வந்தவினை தீர்க்கும் வருவினைகள் தாம்அகற்றும் சந்ததமும் இன்பம் தனைநல்கும் - முந்தை மடந்தை தனக்காக மானின் பின் கானில் நடந்த அடிகள் நமக்கு.

கரந்தைத் தமிழ்ச் சங்க விழாத்தலைமை

இராசராசேசுவர சேதுபதி கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்கித் தமிழ் மொழியின் இனிமையினையும் பெருமையினையும் எடுத்தியம்பினார். அவரை வரவேற்ற அச்சங்கத்தார்.

'உலகம் வியப்ப வுணர்வுமிக் கோங்கிய வித்தகன் சுவாமி விவேகா னந்தன் வேந்துமுனி யென்ன யேத்திப் புகழ்ந்த படைமடம் படாத பண்புடை மரபிற் கொடைமடம் பட்ட குணத்தவ னாய பாற்கரச் சேது பதிதவத் தளித்த ராஜ ராஜேஸ்வரப் பெயர்பெறு மகிப!'

என்றும், -

மன்னிய மேன்மைச் சென்னை மாகாணச் சட்ட நிர்மாணத் தனிச்சபை யிடத்துப் பட்டவர்த் தனர்தம் பகுதிகட் குரியையா யமர்ந்துல கின்ப மடைதர முயல்வோய்'

என்றும்,

'கடைச்சங் கம்மெனக் கரையுரை பொய்த்துப்

போதச் செய்து புதுவது தோன்றிய மதுரைச் சங்க மாண்புறத் தலைமைபூண்டு இனிதி னளிக்கும் இறைவ! நீயன்பால் தலைமை வீற்றிருக்கச் சார்ந்தனை'

" . . என்றும் பாராட்டினர்.