பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை

5

4.

கனிவளர் சோலையிற் கார் வளர் தேவையன் காசினியோர் பணிகுல சேகரன் சீராச ராசன் பரம்பையன்ன யணி வட காடு வரைகண்டு மாசை யடங்கலின் றன் மணியொளிர் நீண்ட தென் ட்ைடின் கண் மேவ மனங்கொள்வதே.

கணி - வேங்கைமரம்; கார் - மேகம்; மேகம் சோலைகளில் உயர்ந்து விளங்கும் மரங்களின்மேல் வந்து உறங்கும், அதாவது படியும் வளர்தல் - கண்வளர்தல், படிதல்; பரம்பை - பரம்பை என்னும் ஊர். அணிவட நாடு வரை கண்டும் - அழகிய வடநாடு வரை பார்த்தும்: அணியும் வடமும் நாடுகின்ற மலையாகிய முலைகண்டும். ஆசை அடங் கலின்றால் - விருப்பம் தணியவில்லை. மணியொளிர் நீண்ட தென் னாட்டின்கண் மேவ - மணி விளங்குகின்ற புகழால் சிறந்த தென்னாட்டி னிடத்துப் பொருந்த, மணி ஒளிர் நீண்ட தென் நாட்டு இன்கண் என்க. நீல மணிபோல ஒளி விடுகின்ற நீண்ட அழகு நிலைத்த இனிய கண்களைப் பொருந்த என்றாம்.

5

எரியில்2ல கூற்றென்று சொல்லக் களம் புக் கெதிர்ந்தவரைக் கரியில்2ல தேரில்லை யாக்கி யவர்புறங் கண்டுதரு சரியில்லை யென்னத் தருராச ராசன் றடவரையி ரரியில்லே யென் னிற் பொங்கும் முலையிட்டிவனதலென் னே.

காரி - தி கூற்று - யமன், களம்-போர்க்களம்; கரி - யானை, புறங் கண்டு - தோற்றோடச்செய்து, எதிர்ந்தவர் தோற்றோடுவதனால் அவர்தம் முதுகினைக் காணலா யிற்று; தரு - கற்பகமரம்; தேவலோகத் துள்ள ஐந்து மரங்களுள் ஒன்று; தன்னை அடுத்துக் கேட்பவர்களுக்கு அவர்கள் விரும்பியவற்றையெல்லாம் தரும் தன்மையது. எனவே , இக் கற்பகமரத்தைக் கொ டைக்கு ஒப்பாகப் புலவர் எடுத்துக் கூறுவர். சரியில்லை-ஒப்பு இல்லை. தடவரை-அகன்ற பெருமலை, அரி-திருமால், அரிசி, வண்டு. அரியில்லையென்னின் - அரிசி இல்லையென்னுமிடத்து: பொங்கும் உலையிட்டு - பொங்குகின்ற உலையினை வைத்து; இவண்இங்கு. ஆதல் என்னே-ஆகின்ற பயன் என்ன, அரிசியில்லாமல் வெறும் உலையினால் பயனில்லை என்றபடி. அரியில்லை என்னின்-வண்டாகிய கண் இல்லை என்னுமிடத்து; பொங்கும் முலையிட்டு - பொங்குகின்ற முலையினைத் தந்து என்ன பயனாம் என்க. அரியில்லை என்னின்திருமால் இல்லையானால், பொங்கும் முலையிட்டு - பெருகிய முல்லை