பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 இராசராச சேதுபதி

உம் கையில் ஆய மைக்கண்தனைக் காட்ட ஒருப்பட்டிலிர் - உம்முடைய கையிடத்ததாகிய மைதீட்டிய கண்ணைக் காட்டச் சம்மதியிர்: எம் கையில் ஆய மலையால் பயன் என்கொல் எண்ணுவது - எம்முடைய கையிடத்த திாகிய மலையாகிய முலையால் என்ன பயனை நினைப்பது.

17

சிரமலை நீர்க்கங்கை சூடிய தேவன் றிருவருளால் வரமலை போனின்று வண்டமிழ் வாணர் வழுத்தியற்குத் தரமலை யாதவன் சீராச ராசன் றடவரைவாய்க கரமலை காட்டிக் கரமலை பற்றினள் காரிகையே.

சிரம் - தலை; அலைநீர்க்கங்கை - அலைகளோடு கூடிய கங்கா நதி: கங்கைசூடிய தேவன் - சிவபெருமான்: வரமலை - கேட்டவரம் அளிக்கும் மலை. வண்டமிழ் - வளப்பம் மிக்க தமிழ்: வழுத்தியல் - புகழ்ப்பாமாலை: வாழ்த்துப்பா. தர மலையாதவன் - தருவதற்குப் பின்னிடாதவன் : தடவரை - பெரியமலை; கரமலை - கையோடுகூடிய மலை என்றது யானையை. மலையிடத்து ஒரு பெண் கரமலையாகிய யானையைக் காட்டி, கரமலை பற்றினள் - யானையைப் பிடித்தாள். கரமலை காட்டியானையாகிய முலையைக் காட்டி, கரம் அலை பற்றினள் - கையால் அலையாகிய கண்ணைப் பற்றினள். மான் காட்டி மானப்பிடித்தாற் போலக் கரமலை காட்டிக் கரமலை பிடித்தனர் என்க.

18

சில்லக்கை யார்த்த விராமேசர்க் கன்பிற் றிருந்துசெங்கோல் வெல்லக்கை வைத்தவன் செந்தமிழ் வாணர் வியந்துகவி சொல்லக்கை மிக்க கொடைராச ராசன் சுரும்பினுள்ளீர் பல்லக்கை நீர்கொண்டு கொல்யானை தந்தீர் பயப்படவே.

அக்கு - எலும்பு, உருத்திராக்கமணி ; செங்கோல் - அரசாட்சிச் சின்னமாகிய நேர்கோல்; செந்தமிழ்வாணர் - செந்தமிழைக் கற்றுவல்ல புலவர்; சுரும்பு - மலை; பல்லக்கை நீர்கொண்டு - சிவிகையை நீர் வைத்துக்கொண்டு; கொல்யானை தந்தீர் பயப்படவே - கொல்லுகின்ற இயல்புடைய யானையை நான் அஞ்சும்படியாகத் தந்தீர். பல்லம் கை நீர்கொண்டு - பல்லம் - பாணம்; அம்பாகிய கண்களையுடைய கையை நீர்கொண்டு. கொல்யானை தந்தீர் பயப்படவே - யான் பயனடையும்படி யானையாகிய முலையினைத் தந்தீர். பயம் - அச்சம், பயன். பல் அக்கை என்றும் பிரிக்கலாம். அக்கு - கண்; பல் - பல அதாவது இரண்டு கண்களையும் மறைத்துக்கொண்டுள்ளாய் என்பதாம்.