பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 29

வில் கொண்ட செங்கையன், வள்ளிய செங்கையன் என்க. கல் - மலை; புயங்கள் மலைபோல் திண்மையுடைவன் என்பதாம். கரந்தைசேது நாட்டு ஊர்களுள் ஒன்று; மெல்லிடை ஏகிக் கெடுதலும், - மெல்லிய இடத்துச் சென்று கெட்டவர்; கடன் மேவு கையார் - கடனைப் பொருந்துதலுள்ளார். நல் இடை ஏகிப் படைத்தது காட்டி னர் - நல்ல இடத்துச் சென்று தாம் படைத்ததைக் காட்டாநின்றனர். மெல் இடை ஏகிக் கெடுதலுற்றார் - மெல்லிய இடை எங்கோ போய்க் கெடுதலைப் பொருந்தியவர்; இடை இல்லாதவர். கடல் மேவு கையார் - கண்ணைப் பொருந்திய கையினர். நல் இடையே கிப்படைத்தது - நல் என்பதிடையே கி ' என்னும் எழுத்தைப் படைத்தது நகில், அதாவது முலை என்றவாறு .

53

கலப்பன் மகிபர் தொழுராச ராச னயந்த வரைத் தலப்பன் மணியி னிலங்கு விர் மாயத் தனம்படைத்தி ருலப்பில் சுகமொழி பீரா சுகத்தை யொளித்துவிட்டீர் கலப்பின் விகாரம் பொருந்திய தின் பமென் காண்பதுவே.

நலப் பல் மகிபர் - நலங்கள் பலவற்றைப் பெற்ற மன்னர் ; நயந்த வரைத்தலப் பல் மணியின் இலங்குவிர் - விரும்பிய மலையிடத்துப்பெற்ற பற்பல இரத்தினங்களைப் போல ஒளியுடன் விளங்குவீர்; மாயத்தனம் படைத்திர் - வஞ்சகத்தன்மை பெற்றிர்; மாயத் தனம் படைத்தின் எம் உள்ளம் தளரும்படியாக முலைகளைப் பெற்றுள்ளிர் உலப்பு இல் சுகம் மொழியீர் - கெடுதல் இல்லாத கிளிமொழியீர், சுகம் - கிளி; சுகம் ஒழியீர் - இன்பம் நிங் காதவராயினிர்: ஆசுகத்தை ஒளித்து விட்டீர் - ஆகின்ற இன்பத்தை மறைத்துவிட்டீர்; ஆச கம் - ஆகின்ற சுகம், அம்பு; ஆசுகத்தை ஒளித்துவிட்டீர் - அம்பு போன்ற கண்களை மறைத்துவிட்டீர்; கலப்பின் விகாரம் பொருந்தியது - சேர்ந்ததால் வேறுபாடு வந்துற்றது : இன்பம் என் காண்பது - என்ன இன்பத்தைக் காண இயலும் . கலப்பின் விகாரம் பொருந்தியது - கலவி; கல' என்னும் எழுத்துக்களுக்குப்பின் வி' என்னும் எழுத்துப்பொருந்தியது என்றவாறு : கலவி இன்பம் காணபது எனக.

54

விளர்தரு புல்லியர் குழ லுருதவில் வேளிசைவண் டுளர்தரு முல்லேயன் சீராச ராச னுயர்கிர்வாய்

வளர்தரு மத்தகம் வைத்தகல் லாரிந்த வையகத்தே கிளர்தரு தீங்கு வளேக்கை யுற்றலென் கிளத்துவதே