பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இராசராச சேதுபதி

விளர்தரு புல்லியர் - வெள்ளறிவுடைய, அதாவது அ றி வ ற் ற கீழோர் ; சூழல் - கூட்டம்; வில்வேள் - கரும்பு வில்லையுடைய மன்மதன் போன்ற அழகன் , இசை வண்டு - இசை ஒலி எழுப்புகிற வண்டு ; உளர்தரு - பறந்து சுழலுகின்ற ; மொய்க்கின்ற. வளர் தருமத்து அகம் வைத்த நல்லார் - தாம் வளர்தற்குக் காரணமான அறத்திலே மனம் வைத்த நல்லோர் ; வையகம் - பூமி , கிளர்தரு தீங்கு வளைக்கலுற் றால் - கிளர்ந்த தீ ங் கி ைன வளைத்தலைப் பொருந்தினால் , என் கிளத்துவது - என்ன சொல்லுவது வளர்தரு மத்தகம் - வளர்தருகின்ற ஆனை, அதாவது முலை நல்லார் - பெண்டிர் ; கிளர்தரு தீம் குவளைக் கை உற்றால் - தேன் கிளர்ந்தெழுகிற அழகிய குவளை மலரோடு கை பொருந்தினால் : குவளை போன்ற கண்ணோடு கை சேர்ந்தால் : அதாவது கண்களை மறைத்தால்.

55

தருவிடை வைத்த பெருங்கொடை தன்கரர் தாங்கியன் பர் வெருவிடை யஞ்ச லெனும்ராச ராசன் வீரையில்வான் பொருவிடை மீமிசைப் பாரத் தனக்தனைப் பூண்டுமையே மருவிட நீருமச் சங்கர கைமுன் வந்ததென்னே.

தரு - கற்பக மரம் , தன் கரம் தாங்கி - தன் கையில் கொண்டு : அன்பர் - அன்பு செலுத்தும் நண்பர் ; வெருவிடை - துன்பத்தால் அஞ்சு கின்றவிடத்து; அஞ்சல் எனும் - அஞ்சாதே என்று சொல்லும் , வீரை - வீரை என்னும் ஊர் : வான்பொருவிடை - வானிலும் போர் செய்கின்ற இடபம் ; விடை மீமிசை - இடபத்தின் மேல் பாரத்து அனந்தனைப் பூண்டு - பொறையுடைய ஆதிசேடனைத் தரித்துக்கொண்டு : நாகம் அணிந்து என்றவாறு : அனந்தன் என்றது சாதி பற்றி ; குரங்கினை அனுமான் என்பது போல்வது. உமையே மருவிட - உமாதேவி மருவ ; நீரும் அச்சங்கரனாக - நீரும் அச் சிவபிரானாக , வான்பொரு இடை மீமிசை - ஆகாயத்தை ஒத்த இடைமேல் பாரத் தனந்தனைப் பூண்டு - பார மான முலைகளைத் தாங்கி; உமையே மருவ - உம்மையே யான் அனைய ; நீரும் மச்சம் கரனாக - நீரும் மீன் கையிடத்ததாக மீன் போன்ற கண் கையிடத்ததாக , கண்களைக் கையால் மறைத்து என்ற படி :

56

உரிதான கல்வியுங் கேள்வியு மிக்க வுறுவர்மனப் பரிதாபர் தீர்த்தொளிர் சீராச ராசன் பனிமலையீர் பெரிதா மரன் மனை பெற்றது காட்டிய பெற்றியைப்போ லரிதாரம் பெற்றதுங் காட்டிவிட் டாலின்ப மார்வதுவே.