உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரையில் பார்த்ததேயில்லையே! இஃது என்ன கொடுமை!’ என்றான்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட ஜேம்ஸ், இடியோசை கேட்ட நாகம் போல நடுங்கினான். ‘ஐயா, என்ன! என்னை நீ அறியாயா? நான் வெளிநாட்டுக்குச் செல்லும் போது, அந்த வேங்கை மரத்தடியில், என் பொருள்களை உன்னிடம் கொடுக்கவில்லையா ? என்னை மோசம் செய்யப் பார்க்கின்றாயே! வெகு நன்று! மரியாதையாக என் பொருள்களைக் கொடுத்தால் விடுவேன்; அல்லாவிடின், இந்நகர நீதிபதியிடம் சென்று, உன் அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்துவேன்!’ என்று வருத்தத்துடனும், கோபத்துடனும் சொன்னான்.

ஜேம்ஸ் கூறிய மொழிகளைக் கேட்ட பட்லர், ‘ஐயா, நீ போய் நீதிபதியிடம் முறையிட்டுக் கொள். அதைப் பற்றி நான் கவலைப்பட வேண்டுவதில்லை. நீ ‘கொடுத்தேன்,’ என்கிறாய். நான் ‘கொடுக்கவில்லை,’ என்கிறேன். நீ என்னிடம் கொடுத்ததற்குச் சாட்சியும் இல்லை. உன் வார்த்தையை யார் நம்புகிறார் பார்ப்போம்!’ என்று கூறிப் பரிகாசம் செய்தான்.

ஜேம்ஸ் மனம் கொதித்தது; கண்களில் நீர் தாரை தாரையாய் வடிந்தது. அவன்

23