உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீதிபதியிடம் சென்று, தன் வழக்கைக் கூறினான்; தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதியை வேண்டிக் கொண்டான்.

நீதிபதி ஒரு சேவகனை அனுப்பி, பட்லரை அழைத்து வரச் சொன்னார். உடனே பட்லர் வந்து, நீதிபதியை நமஸ்கரித்து நின்றான். நீதிபதி அவனை நோக்கி, ‘ஐயா, நீர் மிகவும் நல்லவரைப் போலக் காணப்படுகிறீர். இவர் யார்? இவரை உமக்குத் தெரியுமா ? இவர் பொருள்களை வாங்கியதுண்டா?’ என்று வினவினர்.

பட்லர்: பிரபுவே, இவர் யார் என்பது எனக்குத் தெரியாது. என்னிடம் இவர் பொருளைத் தரவில்லை. இவர் தவறுதலாக வந்து, என்னைப் பிடித்துக் கொண்டார்.

நீதிபதி: ஜேம்ஸ், நீர் இவருக்கு எந்த இடத்தில் பொருளைக் கொடுத்தீர்?

ஜேம்ஸ்: பிரபுவே, ஒரு வேங்கை மரத்தடியில் கொடுத்தேன்.

நீதிபதி: நீர் அதை இவரிடம் கொடுக்கையில், யாராவது பார்த்ததுண்டா?

ஜேம்ஸ்: ஒருவரும் பார்க்கவில்லை. இவர் இவ்வாறு நம்பிக்கைத் துரோகம் செய்வாரென்று யான் கனவிலும் நினைக்கவில்லை.

24