கேள்விகள்:
1. இராபர்ட்டு அரசரின் அருங்குணங்கள் யாவை?
2. கிரேக்க நாட்டரசன் விருந்து ஏற்படுத்தியது எப்படி?
3. இராபர்ட்டு அரசன் கிரேக்க மன்னரின் விருந்தில் எவ்வாறு நடந்து கொண்டான்?
4. இராபர்ட்டின் அடக்கமான குணத்தைக் கிரேக்க மன்னன் எப்படி அறிந்தான்?
5. இராபர்ட்டின் மெய்காப்பாளரைப்பற்றி உனக்கு என்ன தெரியும்?
9. நல்லவர் நேசத்தால் நற்கதி பெறலாம்.
“நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே; — நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
இணங்கி யிருப்பதுவும் நன்று.”
ஒரு காட்டில் ஓர் ஆண்புறாவும், ஒரு பெண் புறாவும் ஓர் ஆலமரத்தில் கூட்டை அமைத்து, வசித்து வந்தன. அவை இரண்டும் உடலும், உயிரும் போல ஒன்றையொன்று அன்புடன் நேசித்து வந்தன. ஒரு நாள், ஆண் புறா வழக்கம் போல, இரை தேட வெளியே சென்றது.
அச்சமயம் வேடன் ஒருவன் அங்கு வந்தான். அவன் அன்று முழுவதும் அக்காட்டில்
அலைந்து திரிந்து, ஒன்றும் அகப்படாமையால் அந்த ஆலமரததடியில், அமர்ந்து, ‘கடவுளே,
39