உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துரோகம் செய்தவனாவேன். இவற்றை எல்லாம் அறிவிற் சிறந்த நீங்கள் யோசிக்க வேண்டும். என்னைத் தயவு செய்து வற்புறுத்தாதீர்கள்,” என்று கூறி வேண்டினன்.

அரசர் அவனை நோக்கி, “பையா, யான், யார் வந்து என்ன கேட்டாலும், இதை விட்டு நகர மாட்டேன். நீ கவலைப்பட வேண்டா; சென்று வருக.” என்றார்.

பையன் நகைத்து, “ஐயா, உங்களுக்கிருக்கும் தாகத்தைப் போலவே, பிறருக்கும் இருக்கும். உங்களுக்கு நீர் வேட்கை அதிகமாகவும், மற்றொருவர்க்குக் குறைவாகவும் இருப்பதுண்டோ? நன்று, நன்று! நீங்கள் பிறருக்கு உதவி செய்யாவிடில், பிறர் உங்களுக்கு எவ்வாறு உதவி புரிவர்?” என்றான்.

பார்த்தார் அரசர்; சிறுவன் மிகவும் கெட்டிக்காரன் என்பதை உணர்ந்தார். உடனே தமது குதிரையை விட்டு இறங்கி, அவனைத் தழுவிக் கொண்டார். “அப்பா, நீ புத்திசாலி. உன்னைப் போன்ற யோக்கியனை யான் கண்டதில்லை. கடமையான வேலையைச் செய்பவர் எவருக்கும் அஞ்சார். அது போல, நீயும் உன் கடமையைச் செய்து முடிப்பதால், அரசனாகிய என்னையும் மதிக்கவில்லை. உனக்கு யான். உயர்ந்த வேலை தருகிறேன்," என்று கூறி, பையனை அழைத்துச் சென்று, தம் அரண்மனையிலேயே வைத்துக் கொண்டார்.

54