கேள்விகள்:
1. ஏழாம் ஹென்றி அரசர் எப்போது ஆடு மேய்க்கும் சிறுவனைச் சந்தித்தார்?
2. “நான் இங்கு இருக்கிறேன்; நீ போய் நீரைக் கொண்டு வா” என்று கூறிய அரசர்க்குச் சிறுவன் கூறிய பதிலென்ன?
3. அவனை மேலும் சோதிக்கத் தன்னை அரசன் என்று கூறிய போது, சிறுவன் சொன்ன பதில் யாது?
4. தன்னை மதியாமல், தன் கடமையைச் செய்த சிறுவனை அரசர் என்ன செய்தார்?
13. அன்னதானமே அனைத்தினும் சிறந்தது.
ஒரு கிராமத்தின் மூன்று பக்கங்களில் காடுகள் அதிகம் இருந்தன. அந்தக் கிராமவாசிகள் பரம துஷ்டர்களாய் இருந்தார்கள். அந்நியர் யாரேனும் வந்து அன்னம் கேட்டால், அவ்வூரார் அடித்துத் துரத்துவர். அவர்கள் கொடுமையான காரியங்களையே செய்து வந்தார்கள். அதே ஊரில், ஒரு கிழவனும், அவன் மனைவியும் இருந்தனர். அவர்கள் யார் வந்தாலும், அன்னம் இடும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்கள். கணவனும், மனைவியும் ஒத்த அன்புடன் வாழ்ந்து வந்தார்கள்.
ஓர் இரவு கடவுள் அவ்வூரார்களைப் பரிசோதிக்க எண்ணி, ஒரு தூதனோடு மனித உருவுடன் அந்தக் கிராமத்திற்கு வந்தார். அவர் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி
55