பக்கம்:இராஜேந்திரன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் ஆராய்ச்சி 11%

கோபாலபுரம் வைரங்களே விற்றுத் தற்காலம செலவிடவும் செய்திருக்கலாமென்று சொன்னல் அதற்கு என்ன ஜவா, சொல்லுவீர்கள்?

ராகவன். ஐயோ! ஜன்மமே; இதற்காகத்தான் துப்புத் துலக்குவதற்காக நீங்கள் ஏற்பட்டீர்கள்போல் இருக்கிறது. சபாஷ்! நன்ருய்ச் சொன்னீர்கள்! எங்கள்பேரில் நேர்த்தி யாகக் கேஸ் ஜோடித்துவிட்டீர்கள்! போதுமையா போதும்! ராஜேந்திரன்: ராகவா அவர்பேரில் ஏன் கோபித்துக் கொள்கிருய் காம் ரங்கநாத்பேரில் அவ்வளவு திட்டமாய்க் குற்றஞ் சாட்டினதற்கு ஈடாக, அவர் நமது பேரில் எல்லா ரும் நம்பக்கூடிய விதமாகச் சந்தேகம் ஏற்படுத்திவிட்டார். அவர் சொன்னதில் ஏதாவது பிசகு இருக்கிறதா? அவர் சொன்ன விதமாயும் வெளிக்குத் தோற்றக்கூடுமல்லவா?

ராகவன்: ஐயா! உண்மையாகவே எங்கள் பேரில் நீர் சந்தேகப்படுகிறீரா?,

கோவிந்தன்: ஐயா! துப்பறிவோன் எல்லாரையும் குற்றவாளிகளாகவும், ரூபிக்கும் வரையில் எல்லாரையும் குற்றமற்றவர்களாகவுந்தான் கருதி, ஆராய ஆரம்பித்துப் பின்னல் ஏற்படும் சாட்சியங்கள் எப்படிப் பொருந்துமோ அப்படிக் கூட்டியும் குறைத்தும் வேலை செய்தால்தான் உண்மை வெளியாகும். எடுக்கும்போதே இவன்தான் செய்திருப்பானென்று தாங்கள் கினைத்ததைப்போல் கினேத்து அதன்பேரில் துப்புக் கண்டுபிடிக்க முயன்ருல் முற்றும் கஷ்டமாய் முடியும். தாங்கள் நினைப்பதைப்போல் கினேத்து ஏமாந்து வேலை செய்வதால்தான் போலீசாரில் பெரும்பாலோர் குற்றமற்றவர்களேக் கொண்டுபோய் அடைத்துவிட்டு, பின் அடைத்துவிட்டதற்காகவாவது பொய்ச் சாட்சிகளேத் தயாரித்து ருஜவாகாமல் திண்டா டும்படி நேரிடுகிறது. ரங்கநாத் பேரில் இவ்வளவு கெட்ட அபிப்பிராயப்பட அவர்மீது தங்களுக்கு இதுவரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/118&oldid=660498" இலிருந்து மீள்விக்கப்பட்டது