பக்கம்:இராஜேந்திரன்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

§§ இராஜேந்திரன்

"என் பிரியமான ரங்கநாத் ! உன் கையில் இக் கடிதம் கொடுப்பவர்தான் கியாதிபெற்ற திருவல்லிக்கேணித் தும் பறியும் கோவிந்தன், அவர் உன்னிடம் எதைப்பற்றிக் கேட் டபோதிலும் ஒன்றையும் ஒளியாமல் உள்ளதை உள்ளபடி சொல்வதோடு அவர் உன்னே எந்தச் சமயத்தில் எப்படி நடக்கச் சொல்லுகிருரோ அப்படியே நீ நடக்க வேண்டும். நான் எதிரிலிருந்து சொன்னல் எப்படி என் வார்த்தை யைத் தட்டாமல் கேட்பாயோ அப்படியே அவர் வார்த்தை பின்படி தவருது நட. அவர் நமது நன்மையையே என்

ஆறும் காடுபவர்.

உன் பிரியமான,

வரதாச்சாரி.”

அக் காகிதத்தைப் பார்த்ததும் ரங்கநாத், கோவிந்தன் கைகள் இரண்டையும் பிடித்துக் குலுக்கி, ' தங்களேச் சந் தித்ததால் என் மனக் குறைகள் தீர்ந்தன. நான் தங்க்ளேத் தேடி மூன்று நான்கு தடவை வந்தும் தாங்க்ள் ஊரில் இல்லையென்றே சொல்லி வந்தார்கள். தாங்கள் எப்போது வந்தீர்கள்?' என்று ரங்கநாத் கேட்டார்.

கோவிந்தன் : நான் இவ்வூரில்தான் இருக்கிறேன். அதி லும் அநேகமாகத் தங்கள் காரியாதிகளேத்தான் கவ னித்து வந்தேன். அதெல்லாம் பின்னல் சொல்லுகிறேன். இப்போது தாங்கள் போலீசார் காவலில் இருக்கிறீர்கள் என்பது தெரியுமா?

ரங்கநாத் : தெரியாதே; யாரும் காவல்காக்க வில்லையே. கோவிந்தன் : தங்களுக்குத் தெரியாமல் தங்களைக் காவல் காக்கிருர்கள். இப்போது தங்களிடம் வந்த கார ணம் அவசரமான காரியம் ஆதலால் சுருக்க்மாகச் சொல்லு கிறேன் கேளுங்க்ள். தாங்கள் விவாகம் செய்துகொள்ள விரும்பிய லக்ஷ்மிதான் நீனிவாசனைக் கொன்ருள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/195&oldid=660575" இலிருந்து மீள்விக்கப்பட்டது