பக்கம்:இராஜேந்திரன்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 223

சாவி கொடுக்காமல் வயிற்றின் பக்கத்திலுள்ள பொத் தானே அமுக்கினர். அப்போது அந்த உருவமானது செயலற்றுத்தான் இருந்தது.

ஆகையால் சாவி கொடுத்த பின்தான் அவ்வுருவத் தினிடம் செல்வது அபாயமென்றும் சாவி கொடுக்காவிட் டால் அவ் வுருவத்தினிடம் பயப்பட வேண்டிய பிரமேயம் இல்லை என்றும் தெரிந்துகொண்டார். அப்பால் மெது ாைக அவ் வுருவத்தைத் தாக்கிப் பார்த்து, இன்னும் என்ன இருக்கிறதென்று உற்று நோக்கினர். ஒரு பெட்டி இருப்பதாகத் தெரிந்தது. அப் பெட்டியை உருவத்திட மிருந்து மெதுவாக வெளியே எடுத்து, தம்மிடம் தயாராக வைத்திருந்த பல சாவிகளால் திறந்து பார்த்தும் சாவி ஒன்றும் பிடிக்காததால் ஒரு சூட்சும விசையைக் கண்டு பிடித்து, அதை முதலில் அமுக்கிக்கொண்டு பார்த்ததில் சாவி போடும் துவாரம் இன்னுெரு பக்கம் இருந்தது. அந்தத் துவாரத்தில் தம்மிடம் இருந்த சாவிகளேப் ப்ோட் டுப் பார்த்ததில் அதற்கு ஒரு சாவி சரிப்பட்டுத் திறந்தது. பெட்டியின் கதவைத் துரக்கிப் பார்த்ததில் பல கடிதங்கள் இருந்தனவே ஒழிய வேறு ஒன்றும் இல்லே.

கடிதங்கள் மாத்திரம் வைத்திருந்தால் அதற்கு இவ்வளவு பந்தோபஸ்து வேண்டிய தில்லை என்றும், இவ்வளவு ஆபத்திற்குள் அகப்பட்டுக்கொண்டு ஒளிந்து திரியும்போதும் அப் பெட்டியைத் தம்முடன் சுமந்து செல்ல வேண்டிய பிரமேயம் இல்லை என்றும் ஆகையால் அப் பெட்டியில் ஏதாவது சூட்சும அறைகள் இருக்க வேண்டுமென்றும் தீர்மானித்து பெட்டியின் வெளி அளவையும் உள் அளவையும், அளந்து பார்த்ததில் ஒன்றரை அங்குலம் வித்தியாசம் இருந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/228&oldid=660608" இலிருந்து மீள்விக்கப்பட்டது