பக்கம்:இராஜேந்திரன்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 இராஜேந்திரன்

விசாரித்ததில் இருந்துதானே நீனிவாசன் பதிஞறரை லட்சம் ரூபாய் செலவழித்த விஷயம் அவருக்குத் தெரிந்தது. அப்படி நீரும் கேட்டு ஆராய்ந்திருக்கலாம் அல்லவா? நமது போலீஸார் ராஜேந்திரன், ரங்ககாத், ராகவன் ஆகிய மூவர்மேல் மட்டும் சந்தேகப்பட்டு அவர்களேயே கற்றிக் கொண்டு திரிந்ததால் நம்மால் கண்டு பிடிக்க முடியாமற் போயிற்று. இப்போது எனது நண்பர் கோவிந்தன் சொன் து எவ்வளவு சுலபமாக இருக்கிறது. அவர் புத்தி நமக்கு இல்லை; இதில் வருத்தம் ஏன் ?

இன்ஸ்பெக்டர் : ரங்கநாத் தம் வீட்டிற்கு வெளியே ல் இருந்த ஜவானுடைய கை கால்களேக் கட்டி வாயில் பஞ்சடைத்துச் சென்ருரே! அது சட்ட வி ரோதம் ുഖT? - - - -

கமிஷனர் : நமது முன்பின் யோசியாத அவசரத்தினுல் கிரபராதிகளான இருவரைச் சிறையில் அடைத்து ஹிம்சிப் பதால் நமக்கு வரக் கூடிய கெட்ட பேரில் இருந்தும் நம்மைத் தப்புவித்ததற்கு காம் அவர் பேரில் குறை கூற வேண்டியது அவசியந்தான்! கோவிந்தா! நீர் இவ்வளவு சிக்கலான இக்கேசில் துப்புத் துலக்கியதற்காக என் மனப் பூர்வமான வந்தனம் அளிக்கிறேன். ஆனல் நீர் லகழ்மியையும் வேத வல்லியையும் அக் காளிகா தேவியிடம் இருந்து தப்புவித்த தைப்போல் கோபாலாச்சாரியையும் தப்புவித் திருக்கக் கூடும் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லே?

கோவிந்தன் : மனித உருக்கொண் டிருக்கும் அந்தச் சனியனுகிய கோபாலாச்சாரியார் என்ற கோபண்ணுவின் சங்கதிகள் முற்றும் தங்களுக்குத் தெரியாது. அந்தச் சண்டாளன் செய்திருக்கும் காரியாதிகளுக்கு இந்த ஜன்மத் தில் மட்டும் அல்ல; இன்னும் நூறு ஜன்மங்கள் எடுத்து இம்சை அடைந்தாலும் அவன் கர்மம் தொலையாது. அஇ! மாத்திரம் அல்ல; அக் காளிகா தேவியின் முதல் நாள்

ధొ,

$

o

X:

Ꮾa?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/257&oldid=660637" இலிருந்து மீள்விக்கப்பட்டது