பக்கம்:இராஜேந்திரன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - இராஜேந்திரன்

மில்லை. ஆகையால் என்ன ஊரில் கொண்டுபோய் விட்டு விடுங்கள். -

ரங்கம்மாள்:உன்னே இரண்டு மாதம் பொறுத்துஅழைத் துக்கொண்டு போய்விட நான் ஒத்துக்கொண்டது உண்மை தான். இப்போது அழைத்துப் போக என்னல் முடியாது. ருக்மிணி. சரி அப்படியால்ை என் தகப்பருைக்குக் காகிதம் எழுதி அவரை அழைத்துப்போகச் செய்கிறேன். ருக்மிணி இவ்வாறு துக்கத்துடன் சிந்தித்துக்கொண் டிருக்க அவ்விடம் விட்டுப் போன கோபண்ணு, ராஜு இறங்கி இருக்கும் வீட்டுக்குப் போய் ஆசிர்வாதஞ் செய்து விட்டு மெளனமாய் உட்கார்ந்திருந்தார். இதுகாறும் அவர் வரவை அதிக ஆவலுடன் எதிர்பார்த்து என்ன பதில் சொல்லப் போகிருரோவென்று காத்துக்கொண் டிருந்த ராஜூ இரண்டு மூன்று தரம் போன காரியம் எப்படியென்று கேட்டதன் பேரில் கோபண்ணு பின் வருமாறு சொன்னு: கோபண்ணு: காரியம் என்னவோ பெரிய இடத்துக் காரி யம். சித்தியாவது கஷ்டமென்றே நினைக்கிறேன்.

ராஜூ சுவாமி தாங்கள் அப்படிச் சொல்லிவிடக் கூடாது. எவ்வகையிலேனும் தயவு செய்து என் மனே பீஷ்டத்தைத் தாங்கள் கிறைவேற்றினலொழிய என் பிரா ணன் நிற்பது அரிது. இது திண்ணமே. தாங்கள் காலேயில், ஆரூடம் பார்த்துச் சாதகம் ஆகுமென்று கூறிவிட்டு இப்போது இப்படிச் சொன்னல் எப்படி?

கோபண்ணு: ஆருடம் பார்த்துக் காரிய சித்தி ஆகு மென்று.சொன்னது உண்மையே; அத்துடன் காரிய சாத ர்ைத்தமாகப் பொருள் விரையம் ஆகும் என்றதை மறக் தீர்கள்போல் இருக்கிறது.

ராஜா: பொருள் செலவைப்பற்றி அக்கறையில்லே. காரியசித்தியே முக்கியம். தாமதமின்றிப் பேசி முடிவு செய்யுங்கள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/35&oldid=660415" இலிருந்து மீள்விக்கப்பட்டது