பக்கம்:இராஜேந்திரன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இராஜேந்திரன்

ராஜு: ஸ்வாமி, மற்ற வெட்டிப் பேச்செல்லாம் பேச வேண்டாம். தாங்கள் சொன்னபடியே மருந்தின் மயக்கத் தில் இருக்கும்போதாவது, அப்பெண்மணியுடன் ரமித்தால் அவ்வளவுக்கு எனக்குக் கிட்டினுல் போதும். அப் பொழுதுதான் என் ஆவியும் கிற்கும். ஆகையால் அப் படியே ஏற்பாடு செய்துவிடுங்கள். ராகவா. உடனே 2000 ரூபாய் தந்திமணியார்டர் செய்யும்படி என் தகப்பருைக்குத் தக்தி அடிப்போம்.

கோபண்ணு: ஒரு வார்த்தை எவ்வளவுதான் தங்கள் தகப்பனர் தங்கள்பேரில் பிரியமாயிருந்தாலும் தங்கள் வார்த்தையைத் தட்டி நடக்காவிட்டாலும் பூரீரங்கத்தில் தங்களுக்குத் திடீரென்று 2000 ரூபாய்க்கு ஏற்பட்ட செலவு என்ன என்று தந்தியில் கேட்க மாட்டாரா? அல்லது அவர் நண்பர் யாராவது இவ்விடத்தில் இருந்தால் அவர் பேருக்குத் தந்தி மணியார்டர் செய்து என்ன விஷயத்திற்கு என்று அறிந்து கொடுங்களென்று சொல்லமாட்டாரா? தாங்கள் ஏதும் தீர்க்காலோசித்துச் செய்யுங்கள்.

இதைக் கேட்ட ராஜ யோசனை செய்து பிராம்மணர் சொன்னது உண்மைதான் என்று கினைத்து இன்னது செய்வதென்று தோன்ருமல் திகைத்து கின்ருர்.

கோபண்ணு: என்னவோ யோசனை செய்கிறீாகள்போல் இருக்கிறது. தங்களுக்கு யார்தான் கடன் கொடுக்க மாட்டார்கள்? எனக்குத் தெரிந்த அ. ர. க. ஞ. தாண்டவ ராயன் செட்டியாரை உடனே கொடுக்கச் சொல்லுகிறேன். ஆனல் ரூ. 2000க்கு 4000 ரூபாய்க்கு உண்டியல், தாங்கள் எழுதிக் கொடுக்க வேண்டி வரும்.

ராகவன்: என்ன கானும், முழுமோசமாய இருக்கிறது! முதலில் 2000 ரூ. கொடுப்பதே அகியாயம். அந்த ரூபா 2000-க்கும் துணையாக இன்னும் 2000ரு. கொடுக்க யார்தான்

சம்மதிப்பார்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/39&oldid=660419" இலிருந்து மீள்விக்கப்பட்டது