பக்கம்:இராஜேந்திரன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrதிணையின் அலங்கோலம் 43.

அம் மாது மருந்தின் மயக்கத்தில் இருந்தாலும் எனது கை அவள்மேல் பட்ட மாத்திரத்தில் அவள் உடல் நடுக்கங் கொண்டதே! அப்போதாவது எனக்குப் புத்தி வந்ததா? ஐயோ! மகா பதிவிரதா சிரோமணியாகிய இம்மாதை மானபங்கம் செய்துவிட்டேனே! அப்பெண் மயக்கம் தெளிந்து எழுந்தால் என்ன கினேப்பாளோ? என்ன செய் வாளோ அறியேனே அவளுக்கு மயக்கம் தெளியுமுன் வந்துவிடும்படி கோபண்ணு வற்புறுத்திச் சொன்னரே, அப்படியே போய்விடலாமா? சீச்சி! அப்படிச் செய்தால் ஒரு கால் அவள் எழுந்தவுடன் தன் அலங்கோல ஸ்திதியைக் கண்டு பிரானத்தியாகம் செய்துகொண்டாலும் செய்து கொள்வாள். நாம் அப் பாவத்திற்கும் ஆளாகக் கூடாது. ஆகையால் அவள் மயக்கம் தெளிந்து எழுந்திருக்கும் வரை யில் காத்திருந்து அவள் திட்டிய போதிலும், சாபமிட்ட போதிலும், இன்னும் என்ன செய்தபோதிலும் சரிதான, நாம் செய்த அக்கிரமத்திற்கு அவைகளே யெல்லாம் ஏற் றுக்கொண்டு அவளேச் சமாதானப்படுத்தி அவள் தற் கொலே செய்துகொள்வதில்லை என்று வாக்குறுதி பெற் அப் போல்ை ஒழிய என் மனமானது ஒரு கிலேயில் நிற்காது.

‘என்ன செய்வேன்? அவள் எழுந்தவுடன் என்ன சொல் வாளோ என்ன செய்வாளோ யான் அறியேன். திருச்சிக் குப் பந்தாட வந்ததால் அல்லவா பூநீரங்கம் வரும்படிக்கும், வந்த இடத்தில் அவளேக் கண்டு காமுற்று இப்பேர்ப் பட்ட அக்கிரமம் செய்யும்படிக்கும் ஏற்பட்டது. நான் இப் பேர்ப்பட்ட இழி தொழில் செய்தேனென் ருல் யாராவது நம்புவார்களா? என்னே நல்லவனென்று எல்லாரும் சொல்லிச் சிலாக்கியமாய்ப் பேசினலும் என் மனச்சாட்சி யானது, "நீ சண்டாளன், மகா பாதகன்' என்றுதானே சொல்லிக்கொண் டிருக்கும். இனி என் வாழ்நாட்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/42&oldid=660422" இலிருந்து மீள்விக்கப்பட்டது