பக்கம்:இராஜேந்திரன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்திரனின் சந்திப்பு 71

உயிர் துறந்தவர் வெகு பேர். அந்த ஆபத்தை இப்போது கினேத்தால்கூட என் உடம்பு நடுக்கம் கொடுக்கிறது.

என்னுடன் வந்த பெண், இரண்டு பலகைகளுக்குள் நசுக்குண்டு இறந்து கிடந்தாள். ஆல்ை அவள் குழந்தை மட்டும் பக்கத்தில் அழுதுகொண் டிருந்தது. எனக்குக் காலிலும் கையிலும் மட்டும் அடிபட்டு மூர்ச்சித்து விழுந்து விட்டேன். சுமார் ஒரு மணி நேரத்திற்கு அப்பால் ஜனங் கள் எனக்கு மூர்ச்சை தெளிவித்த பின் என்னுடனிருந்த பெண் என்ன ஆனளென்று பார்த்தபோதுதான் இவ் விஷயங்கள் தெரியவந்தன. அவள் இறந்து போய்விட்டா ளென்று டாக்டர்கள் சொன்னதால், அந்தக் குழந்தையை யும் மூட்டையைபும் மட்டும் எடுத்துக்கொண்டு ரெயில்வே அதிகாரிகளின் உதவியால் விடு வந்து சேர்ந்தேன்.

என் புருஷனிடம் நடந்த விருத்தாந்தங்களேச் சொன்ன தோடு, அக்குழந்தையை ஜாக்கிரதையாகப் பார்க்கும்படியும் சொன்னேன். பிறகு என்ன நடந்ததென்றே எனக்குத் தெரியாது. எனக்கு ரண ஜன்னி பிறந்ததென்றும் மூன்று ம தங்க ள் பிரக்ஞையில்லாமல் கிடந்தேனென்றும், தெரிந்தது. நான் பிரக்ஞையற்றிருக்கும்போது மூட்டையை எங்கோ போட்டுவிட்டார்கள். அப்பால் தேடியதில், "மூட்டையேது மண்ணே து! நீ பிழைத்து வந்ததே துர்லப மாயிற்றே மூட்டையை எங்கே கொண்டு வந்தாய்?’ என்று என் புருஷன் சொல்லிவிட்டார். குழந்தை இன்னுருடைய தென்று தெரியாததால் என் குழந்தையைப்போல் நானே வளர்த்து வந்தேன்.

இப்போது ஒரு மாசத்திற்கு முன் திடீரென்று வாந்தி பேதியால் என் புருஷன் இறந்து போய்விட்டார். எங்களுக் குப் பிள்ளேயில்லாததால் அப்பிள்ளையைச் செல்லப் பிள்ளே யாக வளர்த்து வந்தோம். அவன் சரிவரப் படிக்காமல் விளேயாடித் திரிகிருன். என் புருஷன் இறந்தபின் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/70&oldid=660450" இலிருந்து மீள்விக்கப்பட்டது