பக்கம்:இராஜேந்திரன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இராஜேந்திரன்

7

நாள் அடுப்புக்குக் கட்டைகள் இல்லாததால் பரனேமேல் ஏறிக் கட்டைகள் ஏதாவது மூலையில் இருக்கின்றனவா என்று பார்க்கையில் அவ்விடத்தில் ஒரு மூட்டை கிடந்தது. அம்மூட்டையை எடுத்து வெளிச்சத்தில் பார்த்ததில் சுமார் 19-வருஷங்களுக்கு முன் அப்பெண்ணுல் கொடுக்கப் பட்ட மூட்டையென்று தெரிந்து அதை அவிழ்த்துப் பார்த் ததில் அதில் ஒர் ஐம்பது ரூபாய் கோட்டும் ஒரு காகிதமும் தலைக்குட்டையும் ஒரு புடைவையும் இருந்தன. அந்தக் கடிதத்தின்மேல் எழுதியிருந்ததைப் பார்த்த உடனே நான் சொத்துக்காரரிடம் சொத்தை ஒப்பிக்கக் கருதி அவள் கேட்டுக்கொண்டபடி அந்த விளம்பரத்தைப் பிரசுரித்தேன். இதோ இருக்கிறது. பாருங்கள் அந்தக் கடிதம். - இப்படிச் சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுத்தாள். கடிதத்தின் பேரில் பின்வரும் விஷயங்கள் எழுதப்பட் டிருந்தன:

'திடீரென்று மரணம் நேரிட்டால் இந்த மூட்டை யை எடுக்கும் கனவான்களாவது சீமாட்டிகளாவது இதில் அடக்கம் செய்திருக்கும் ரூபாய் 50 நோட்டை விளம்பரச் செலவிற்கு வைத்துக்கொண்டு பின்னல் குறிப்பிட்ட விளம்பரத்தைச் சென்னையில் பிரசுரமாகும் பத்திரிகைகளில் வெளிப்படுத்தும்படிக்கும், அதைக் கண்டு எவராவது வந்து தம் பேர்தாம் ராஜாவென் அம் தாம்தாம் விளம்பரத்தில் குறிப்பிட்ட ஆசாமி யென்றும் சொல்லித் தம்மிடம் கடிதத்தையும். குழந்தையையும் சாமான்களேயும் கொடுக்கும்படி கேட் டால்.....u ஜனவரிமீ வே இரவு பூநீரங்கத்தில் தம் ஞாபகார்த்தமாய் அவர் கொடுத்த வஸ்துக்கள் என்ன என்னவென்று கேட்க வேண்டியது. அவர் தம் பேர் பதித்த வைர மோதிரமும் ஜரிகை புட்டா போட்ட் மதுரைக் கொட்டடித் தலைக்குட்டையும் கொடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/71&oldid=660451" இலிருந்து மீள்விக்கப்பட்டது