பக்கம்:இராஜேந்திரன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒர் ஆச்சரியமான திருட்டு 85

உால் இது முதல் நாம் பாகஸ்தராயிருந்து வியாபாரம் நடத்திய போதிலும் பழைய சிநேகப்பான்மை விட்டுப் போகுமென்பதை உறுதியாய் நம்பு.

கோபமாய்ச் சொல்லவே ராகவன் ஒருவசது ஒத்துக்கொண்டு ரீனிவாசனுக்கு அன்றைத்தினம் சாயக் தரம் 4-மணிக்கு வந்து தன்னிடம் சில விஷயங்கள் பேசி விட்டுப் போகும்படி கடிதம் எழுதி ஒரு சேவகனிடம் கொடுத்தனுப்பினர். -

ராகவன்: இனி நமது வியாபாரத்தைப் பற்றியும் தங்க ளிடம் சில விஷயங்கள் பேச வேண்டியிருக்கிறது. தங்களு டைய நண்பர்களின் சிபார்கின் பேரில் வழிபறிபாளையும் ஜமீன்தாரவர்களின் சொத்தின்பேரில் சுமார் இருபத் தைந்து லட்சம் ரூபாய் கடன் கொடுக்கும்படி சொல்லிக் கொடுத்தோமென்பதை மறந்திருக்கமாட்டிர்கள். நாம் தகுதியான சொத்தின்பேரில் இப்பெருந்தொகை கடன் கொடுத்திருந்த போதிலும் அதன் முதலிலாவது வட்டியிலா வது நாரதுவரை ஒரு பைசா கூடச் செலுத்தப்படவில்லை. ஆகையால் சில சமயங்களில் யாராவது திடீரென்று பெருந்தொகைகளுக்கு உண்டியல் அனுப்பினுல் அப்பொ ழுது சமாளிக்கச் சற்றுக் கஷ்டமாயிருக்கிறது. ஆகையால் அத்தொகையிலும் ஏதாவது வசூல் செய்யப் பிரயத்தனம் செய்வது சிலரக்கியம்.

ராஜேந்திரன்: நண்பரே! தாங்கள் இவ்வளவு கஷ்டங் களேயும் பொறுத்துக்கொண்டு இதுவரையில் வியாபாரம் தனியாய் நடத்தி வந்ததற்காக நான் எந்த விதமாக உப சாரம் சொல்வதென்று தெரியவில்லே. இன்றைய முதல் நானும் தங்களுக்கு ஒத்தாசையாய் இருந்து வேண்டிய விஷயங்களேக் கவனித்து நடத்துவேன். தாங்கள் இனித் தனியாகப் பாரத்தை வகிக்கவேண்டாம்; இருவரும் கலந்தே நடத்துவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/84&oldid=660464" இலிருந்து மீள்விக்கப்பட்டது