பக்கம்:இராஜேந்திரன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசாரணை 3]

முல் இருந்ததால் சேவகனே விட்டு ராகவனே அழைத்து ஆரச் சொன்னர். அவர் வந்தவுடன் அவரிடம் கோட்டுகள் காணுமற்போன விஷயம் தெரிவித்தார். அவர் உடனே ராஜேந்திரனேக் கூப்பிடவிட்டுச் சமாசாரம் தெரிவித்தார். நோட்டுகள் மட்டும் காணுமற் போயினவா? வேறு ஏதாவது போயிருக்கிறதா என்று சோதித்துப் பார்த்ததில் சுமார் ஐம்பது லட்சம் ரூபாய் பெறுமான 'கோபாலபுரம் வைரங் தள் என்ற பேர்போன வைர நகைகளும்.அந்த நகைகளின் சொந்தக்காரரால் பந்தோபஸ்துக்காக வைக்கப்பட்டிருந் ததும் காணப்படவில்லை. பூட்டுகளெல்லாம் சரிவரப் பூட்டப் பட்டிருந்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த நோட்டுகளும் இந்த நகைகளும் காணுமற் போனது ஆச்சரியமல்லவா? இந்த விஷயம் வெளிக்கு வரவும் எல்லோரும் திகைத்து நின்றனர்.

4. விசாரணை

'இன்ன லரும்பொருளை ஈட்டுதலுந் துன்பமே

பின்னதனைப் பேணுதலும் துன்பல்ே.’

நாஜேந்திரன்: ரங்கநாத், இதென்ன ஆச்சரியம் ! பூட்டுகளோ எல்லாம் சரியாக இருக்கின்றன. பெட்டியும் சாதாரணமானதல்ல. இரும்புப் பெட்டி அதில் வைத்த வைரககைகளும் நோட்டுகளும் காணுமற்போயினவென்ருல் என்ன தண்கட்டு வித்தை இது எவ்விதமாக ஆலோசித் தாலும் வழிவகை ஏதும் தெரியவில்லையே! வெளியிலிருந்து எவரேனும் கள்வர் வந்து திருடியிருப்பதாகவும் சொல்ல முடியவில்லை. எடுத் தவன் உள்ளனும் கள்ளனுமாகத்தான் இருக்கவேண்டும். நமது வியாபார ஸ்தலத்தில் சம்பந்தப் பட்டவர்கள்தான் செய்திருக்க வேண்டும். வேறு என்ன விதமாகத்தான் முடிவுக்கு வருகி றது ரங்கநாத், கோட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/90&oldid=660470" இலிருந்து மீள்விக்கப்பட்டது