பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

ராணி மங்கம்மாள்

பொன்னையும் பொருளையும் அவற்றைவிட அதிக சக்தியுள்ள உபசார வார்த்தைகளையும், உபகாரத்தையும் அடைந்தார்கள். வசப்பட்டார்கள். மதித்தார்கள். சாகஸத்தால் யாருக்குப் பணிந்து கப்பம் கட்டினாளோ அவர்களையே வேறொரு விதத்தில் தன் விருப்பப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தாள். தன் விருப்பப்படியே எல்லாம் நிறைவேற்றிக்கொண்டிருந்தாள்.

எல்லாம் இப்படிச் சுமுகமாகப் போய்க் கொண்டிருந்தாலும் உள்ளூர அவளுக்கும் கவலைகள் இருந்தன. வருத்தங்கள் இருந்தன. வெளியே சொல்ல முடியாதபடி உள்ளார்ந்த ஊமைத் துயரங்கள் இருந்தன.

டில்லி பாதுஷாவை அவள் சரிப்படுத்தி விட்டாலும் மராத்தியர்களிடமிருந்தும், மராத்தியப் படைத்தலைவர்களிடமிருந்தும் அவளுக்கு அடிக்கடி தொல்லைகள் இருந்தன. அவர்களை அடக்கி வசப்படுத்த அவர்களுக்கும் அடிக்கடி பொருளை வாரியிறைக்க வேண்டியிருந்தது. அவர்களில் சிலர் எவ்வளவுதான் கொடுத்தாலும் திருப்திப்படாதவர்களாக இருந்தனர். அடிக்கடி பொருளுக்காக ராணி மங்கம்மாவைத் தேடி வந்தனர். ராணி மங்கம்மாள் மராத்தியர்கள் விஷயத்தில் பாம்பென்று தாண்டவும் முடியாமல் பழுதை என்று மிதிக்கவும் முடியாமல் திணறினாள். சிந்தித்துச் சிந்தித்து முடிவு தோன்றாமல் அந்த விஷயத்தில் திகைத்தாள்.


16. ஒரு மாலை வேளையில்...

ராத்தியப் படைத்தலைவர்களும் ராணி மங்கம்மாளிடம் அடிக்கடி பணம் பறித்தனர். மதுரைப் பெரு நாட்டின் ஆட்சிக்கு ஊறு நேராமலிருக்கவும் எல்லைகளைப் பாதுகாக்கவும் மராத்தியர்களை அடிக்கடி தன்னைக் கட்டிக் கொண்டு போகவேண்டியிருந்தது. படை பலத்தைக் காட்டுவதிலும், நேரடிப் போரில் இறங்குவதிலும் இருந்து