உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 பல பாலங்கள் கட்டப்பட்டு விட்டன. இன்னும் ஐம்பது பாலங்கள் கட்டி முடித்த பிறகு இச்சாலை வழியாகச் சென்னையிலிருந்து இராமேசுவரத்திற்குச் செல்லலாம். பாம்பன் கால்வாயின் மீது சாலைப்பாலம் கட்ட இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஆறு கோடி ரூபாய் செலவாகும். 1975-குள் இப்பாலம் முடிவடையக் கூடும். ஐக்கிய நாடுகள் அவையின் ஆதரவில் உலகெங்கும் புதிய சாலைகள் போடப் பெற்று வருகின்றன. இவற் றிற்கு International Highways என்று பெயர். இதில் ஒரு பகுதி The Pan Asia Highway என்பது. இது ஈரானி லுள்ள டெகரானில் தொடங்கி சிங்கப்பூர் வரை செல் லும். 31,200 மைல் நீளமுள்ள இந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலையை விடத்தரம் சிறந்ததாயும் ஆசியாவி லுள்ள எல்லா நாடுகளையும் இணைப்பதாயும் இருக்கும். உலகின் ஈடு இணையற்ற சாலையாக ஆசிய நெடுஞ் சாலையை ஆக்க ஆசிய நாடுகளும் ஆசிய - நெடுந்தூரக் கிழக்கு நாடுகளுக்கான பொருளாதாரக் கழகமும் (ECAFE) உதவுகின்றன. 1 இந்தச் சாலை இலங்கையையும் இணைக்கும். தென் னிந்தியாவில் பெங்களூரிலிருந்து இராமேசுவரம் வரை ந்தச் சாலை போடப்படும். இந்தச் சாலையைப் பயன் படுத்துபவர்கள் இராமேசுவரத்திலிருந்து கப்பலில் இலங் கைக்குச் செல்வர். இம்மாவட்டத்தில் இதுவே சிறந்த சாலையாக அமையும். இச்சாலையில் ஆங்காங்கு ஹோட்டல்களும் மோட்டல்களும் சிறு விடுதிகளும் உலகச் சுற்றுப் பயணி களுக்கு ஏற்றவாறு கட்டப்படும்.