112 பஸ் போக்குவரத்து: இம்மாவட்டத்தில் ஏற்பட்ட முதல் பேருந்து திருச்சி - தேவகோட்டை மெயில் பஸ். (1905) சிறந்த முறையில் இம்மாவட்டத்தில் பஸ் போக்கு வரத்தை அமைத்து, குறித்த நேரத்தில் நடத்திய பெருமை, தனியார் துறையைச் சேரும். டி.வி.எஸ் கம்பெனியார் இவ்வகையில் திறமையாக வழிகாட்டினர். அவர்களைப் பார்த்தும் அவர்களிடம் பஸ்களை வாங்கியும் அவர்களிடம் சுடன் உதவி பெற்றும் பல சிறிய கம்பெனி கள் பஸ் போக்குவரத்துத் தொழிலை நன்கு நடத்தி வருகின்றன. 1969 முதல் அரசாங்க பஸ்கள் இம்மாவட்டத்தில் பெரிய அளவில் இயங்குகின்றன. இராமநாதபுரத்தில் இதற்கு ஒரு பெரிய அலுவலகம் ஏற்பட்டிருக்கிறது. இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கும் தமிழ் நாட்டின் பிற நகரங்களுக்கும் விரைவு வண்டிகள் செல்லுகின்றன. ஏற்கெனவே தனியார் துறையில் நன்கு இயங்கிய மதுரை - தேவகோட்டை, மதுரை - விருதுநகர் களில் சில இப்போது அரசு உடைமையாக உள்ள பாண் டியன் போக்குவரத்துக் கழகத்தால் நடத்தப் பெறு கின்றன. - 1 பஸ் பத்துக்கு மேற்பட்ட நகரங்களில் உள்ளூருக்குள் (டவுன் பஸ்) பேருந்துப் போக்குவரத்து நடைபெறு கிறது. இராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு யாத்தி ரீகர் சென்று கோடிக்கரையில் தீர்த்தமாட வசதியாக ஒரு புதிய சாலை 1972-இல் போடப்பட்டிருக்கிறது. (1964-க்குப் பிறகு தனுஷ்கோடிக்கு படகில் மட்டுமே மக்கள் போய் வருகிறார்கள்) இராமேசுவரம் தேவ
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/114
Appearance