உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இலங்கை வாணிபமே இன்று இத்துறைமுகத்தின் உயிர் நாடி. 1 30-க்கு முன் பாமாவுக்கும் இத்துறை முகத்துக்கும் பாய்மரக் கப்பல்கள் போய் வந்து கொண்டிருந்தன அரண்மனையன்ன செட்டிநாட்டு வீடுகள் கட்ட, கவினுறு பர்மியத் தேக்குத் தொண்டித் துறைமுகத்தில்தான் வந்து இறங்கிற்று. ஒவ்வொரு வீட்டுக்கும் தனியே ஒரு சிறு கப்பலில் தேக்கு வந்ததாகக் கூறுவர். தனுஷ்கோடி: இச்சிறு துறைமுகம் 1964வரை உயிரோடு இருந்தது. அந்நாளில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள் களும் எழுபது ஆயிரம் பயணிகளும் ஆண்டுதோறும் ம் இத்துறைமுகத்தைப் பயன் படுத்தினர். இப்போது இதில் சிறு பகுதி இராமேசுவரம் துறைமுகம் வழியாக நடைபெறுகிறது. பாம்பன், கீழக்கரைத் துறைமுகங்களின் வாணிபம் ஓர் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கும் குறைந்தது. அமெரிக்காவிலிருந்து திரும்பிய விவேகானந்த சுவாமி களின் புனிதப் பாதங்கள் இந்தியாவில் முதலில் பட்டது பாம்பன் துறைமுகத்தில்தான். சேது சமுத்திரத் திட்டம்: சேது சமுத்திரம் என்பது இராமநா தபுர மாவட் டத்தின் நாக்குப்போல் நீண்டிருக்கும் இராமேசுவரம் தீவுக்கும் இலங்கைக்கும் இடையேயுள்ளது. இக்கடற் பகுதி வடக்கில் பாக் விரிகுடாவும் (Palk Gulf) தெற்கே மன்னார் விரிகுடாவும் சேர்ந்தது. இப்பகுதியில் கடல் ஆழமாக இல்லை. இதனால் பெரிய கப்பல்கள் இவ்வழியில் செல்ல இயலவில்லை.