உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழுவை நியமித்தது 119 1863-இல் சென்னை இராசதானி யின் கவர்னரும் பொறியியல் அறிஞருமான Sir Will- iam Denison Sir John Stoddart (Chief Assistant to the Surveyor General of the Ceylon Government) சேர்ந்து பாம்பனுக்கு அருகே ஓர் இடத்தைக் கால்வாய் வெட்டத் தேர்ந்தெடுத்தனர். 1872 இல் இந்தத் திட்டத்தைப் பற்றிப் பிரிடிஷ் அரசு மிகவும் சிந்தித்தது. 1884 இல் 865 பவுன் செலவு செய்த த பிறகு திட்டம் ஒத்திப் போடப் பெற்றது. 1902-இல் தென்னிந்திய இரயில்வே கம்பெனி ஒரு திட்டம் தீட்டி 50 லட்சம் ரூபாய்ச் செலவில் கால்வாய் வெட்டி ஆண்டுக்கு ஏழரை லட்சம் வருவாய் பெறலா மென்று கூறிற்று. திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒப்புக்கொண்ட சர். பிரிஸ்டோ, கொச்சி துறை முகத்தை விரிவாக்கும் பொறுபபை ஏற்றுக் கொண்ட தால் சேது சமுத்திரத் திட்டம் செயற்படவில்லை. . இந்தியா அரசியல் விடுதலை பெற்ற பிறகு இத் திட்டத்தைப் பற்றிப் பொதுமக்களின் ஆர்வமும் நம்பிக்கையும் மிகுதியாக இருந்து வருகிறது. இத் திட்டம் உலகின் முக்கியமான கால்வாய்களுள் ஒன்றாக அமையும். உலகப் புகழ் பெற்ற சூயசுக்கால்வாய், எட்டாம் நூற்றாண்டில் திட்டமிடப்பெற்று 19-ஆம் நூற்றாண்டில் நிறைவேற்றப் பெற்றது; ஐரோப்பாவிலிருந்து இந்தியா விற்கு வரும் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி வராமல் சூயஸ் கால்வாய் வழியாகக் குறுக்குப் பாதை ஏற்பட்டது. பசிபிக் அட்லாண்டிக் ஆகிய பெருங்கடல்கள் இரண்டினையும் இணைக்கும் பனாமாக் கால்வாயும்