உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வெட்டப் பெற்றிருக்கிறது. இதனால் தென் அமெரிக்கா வும் வட அமெரிக்காவும் பொருளாதார வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இருபத்தைந்து நாட்கள் சுற்றிய கப்பல்கள் இப்போது எட்டு மணி நேரத்தில் போய்ச் சேரும் இடங்களை அடைகின்றன. தாம் ஜெர்மனியில் கீல் கால்வாய் வெட்டப்பெற்று வடகடலையும் பால்டிக் கடலையும் இணைத்து டென்மார்க் கடலைச் சுற்றாமல் கப்பல்கள் குறுக்கே செல்லுகினறன. சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவும் கனடா வும் கூட்டாகச் சேர்ந்து செயின்ட்லாரன்ஸ் கால்வாயை வெட்டியிருக்கின்றன. இதற்கு நூறு கோடி டாலர் செலவாயிற்று. சுப்பீரியர், மிச்சிகன், ஒன்டாரியோ போன்ற பல பெரிய ஏரிகளை இணைத்து உ குள் ஓராயிரம் மைலுக்குள் துறைமுகம் உண்டாக்கி யிருக்கிறார்கள். நியூயார்க்கு நகரில் எழுதி உருவாகும் நாளிதழ்களைச் சிக்காகோ நகரில் அச்சிடும் வசதியும் இந்தக கால்வாயால் ஏறபட்டிருக்கிறது: மெக்சிகோவில் டெகுவன்டீபெக் பூசந்தியில் ஒரு கால்வாய் வெட்டி, பசிபிக் பெருங்கடலை மெகசிகோ வளைகுடாவுடன் இணைத்திருக்கிறார்கள். ரஷ்யாவில் ஏரல் கடல், காஸ்பியன் கடல் இரண்டை யும் சேர்த்து வால்கா, டான் பேராறுகள் வாயிலாகக் கருங்கடலை இணைக்க வேலை நடைபெறுகிறது. பால்டிக் கடல், வெண் கடல் இரண்டையும் லடோக், ஒலிகோ ஏரிகள் வழியாகக் கால்வாய் வெட்டி இணைக்கவும் வேலை மேற்கொண்டிருக்கிறார்கள். தாய்லந்து நாட்டில் கிரா பூசந்தியில் கால்வாய் அமைத்து வங்காள விரிகுடா - சயாம் வளைகுடா இணைப்