உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 புக்குத் திட்டமிட்டிருக்கிறார்கள். மலேயா தீபகற்பத் தைக் கப்பல்கள் சுற்றுவது இதனால் தவிர்க்கப்படும். இந்தப் பட்டியலில் சேது கால்வாய் விரைந்து இடம் பெறுவதாக. இரயில் போக்குவரத்து இம்மாவட்டத்தில் 268 மைல் அல்லது 432 கி.மீ. தொலைவுக்கு இரயில் பாதைகள் உள்ளன. இப்பாதை கள் யாவும் மீட்டர் கேஜ் பாதைகளே. அதாவது இவற்றின் அகலம் மூன்று அடி, மூன்றே முக்காலே அரைக்கால் அங்குலம். மொத்தம் 54 இரயில் நிலையங்கள் உள்ளன இவற்றுள் (!) விருதுநகர்,சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜ பாளையம் வழியாக சென்னை - திருவனந்தபுரம் இரயில் பாதையும். (2) மானா மதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், பாம்பன் வழியாக மதுரை - இராமேசுவரம் இரயில் பாதையும். (3) செட்டி நாடு, காரைக்குடி, சிவகங்கை வழியாக திருச்சி - மானா மதுரை இரயில் பாதையும். - . (4) விருதுநகர், சாத்தூர் வழியாக மதுரை- தூத்துக்குடி இரயில் பாதையும் (5) கண்டனூர் புதுவயல் வழியாக காரைக்குடி- அறந்தாங்கி இரயில் பாதையும் (6) அருப்புக் கோட்டை, திருச்சுழி வழியாக விருதுநகர் - மானா மதுரை இரயில் பாதையும் செல்லுகின்றன.