123 பாம்பனுக்கும் தனுசுகோடிக்கும் போடப் பெற்ற இரயில் பாதை புயல் காற்றாலும் கடல் கோளாலும் அழிந்துவிட்டது. . வணிக நகரங்களாகத் திகழும் விழுதுநகர், சாத் தூர்,சிவகாசி, இராஜபாளையம், காரைக்குடி, இராம நாதபுரம் ஆகியவற்றுக்கு இரயில் வசதி இருக்கிறது. முக்கிய இடங்களான கமுதிக்கும் முதுகுளத்தூருக்கும் இரயில் தொடர்பு இல்லை. மானா மதுரையிலிருந்து தூத்துக்குடித் துறைமுகத்திற்கு இரயில் பாதை போடப்பட்டால் இந்நகர்கள் இரயில் வசதி அடைந்து இப்பகுதி வளர்ச்சியடையும். திருப்பத்தூரும் சிங்கம் புணரியும் பல துறைகளில் வளர்ச்சி பெற்று வருவதால் காரைக்குடி திண்டுக்கல் இரயில் இணைப்பும் இம்மாவட் டத்தின் தேவையாகும். இரயிலில் அனுப்பப்படும் சரக்குகளை வைத்திருப்ப தற்கும் இரயில் பெட்டி மாற்றி அனுப்புவதற்கும் பயன்படும் மார்ஷெல்லிங் யார்டு (Marshalling yard) விருதுநகரில் 1963 அளவில் முப்பது லட்சம் ரூபாய்ச் செலவில் ஏற்பட்டது. விருதுநகர் -- மானா மதுரை இரயில் பாதையின் விளைவாக திருச்சிக்கும் விருது நகருக்கும் உள்ள தொலைவு 13 மைல் குறைந்திருக்கிறது. இதனால் திருச்சிக்கு வடக்கேயிருந்து (1) தூத்துக்குடித் துறைமுகம் (2) நெல்லை மாவட்டம் (3) கேரளம் ஆகிய வற்றுக்குச் செல்லும் எல்லாப் பொருள்களும் திருச்சி - மதுரை - விருதுநகர் இரயில் பாதையிலேயே செல்கின்றன. விருதுநகர் மார்ஷெல்லிங் யார்டு, மதுரை மார்ஷெல்லிங் யார்டைவிடப் பெரிது. மானா 1 அருப்புக்கோட்டையிலிருந்து முதுகுளத்தூருக்கு இரயில் பாதை போட வேண்டுமென்ற எண்ணம்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/125
Appearance