உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 தார் தூத்துக்குடி எக்ஸ்பிரஸை போட் மெயில்' என்று சொல்லுகிறார்கள். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இரயில் தொடர்பு ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணம் 1876-இல் ஆங்கி லேயர்க்கு ஏற்பட்டது. பல மாற்றுத் திட்டங்கள் பரிசீலிக்கப் பெற்றன. பாம்பனுக்கும் மண்டபத்திற்கும் இடையே கீழே கப்பலும் மேலே இரயிலும் செல்லக் கூடிய ஒரு பாலத்தைக் (A viaduct With Schtrzer lift- bridgc orer the Palk Strait) கட்டுவதென்று முடிவு செய் தனர். இப்பாலத்தைப் பற்றிய விவரங்களைத் தனியே தருவோம். இலங்கைக் கரையிலுள்ள தலை மன்னார் என்னு மிடம் தனுசுகோடியிலிருந்து 22 மைல் தொலைவுதான். இந்த இரண்டு கரைகளுக்கும் இடையே ஒரு சிறு கப்பலை (Ferry) இரயில்வே கம்பெனியே நடத்துவதென்றும் முடிவு செய்யப் பெற்றது. 1914-இல் இந்தப் போக்கு வரத்துத் தொடங்கி, நாள்தோறும் இலங்கை செல்லும் வாய்ப்பு எளிதில் ஏற்பட்டது. இலங்கைக்கு நூறாயிரம் தமிழர்கள் செல்லத் தொடங்கினர். இதன் விளைவு இலங்கையின் செழிப்பு. அதே நேரத்தில் உழைக் கக்கூடியவர்களின் உழைப்பு இராமநாதபுர மாவட்டத் திற்குக் கிடைக்காமல் போயிற்று. வந்ததை பல மிகப் பெரிய அளவில் இந்தியர் இலங்கைக்கு இலங்கை அரசு விரும்பவில்லை. அதனால் இந்தியர். இலங்கைக்குள் நுழைவதற்குப் பல கட்டுப் பாடுகளை அவர்கள் விதித்தார்கள். எனவே 1959 முதல் தனுசுகோடி - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து ஒரு வாரத்திற்கு மூன்று நாட்களாகவும் பின்னர் வாரத்திற்கு ஒரு நாளாகவும் குறைக்கப் பெற்றிருக்கிறது.