126 தள்ளுக்காற்று அடித்தால் இந்தச் சிறு கப்பலில் ஒரு மணி நேரத்தில் இலங்கைக் கரையை அடையலாம். எதிர்க்காற்று அடித்தால் இரண்டரை மணி நேரம் ஆகும். இக்கப்பலின் கீழ்த் தளத்தில் பயணம் செய்பவர் களுக்கு 1914-இல் ஒன்றரை ரூபாய் கட்டணம் வசூலிக்கப் பெற்றது. இப்போது இதைப்போல பதினாறு பங்கு வசூலிக்கப் பெறுகிறது. இக்கப்பலிலிருந்தவாறு, இலங்கைக்கும் இந்தியாவிற் கும் பேச தொலைபேசி வசதி செய்யப் பெற்றிருக்கிறது. இயற்கையின் சீற்றத்தால் 1964-இல் தனுசுகோடி ரயில் நிலையமும் அதை அடுத்து கடலுக்குள் அமைத் திருந்த பாலமும் அழிந்து விட்டதால், இப்போது ராமேசுவரத்திலிருந்து கப்பல் போக்குவரத்து நடை பெறுகிறது. இந்திய - இலங்கைப் பயணிகளுக்கு வசதியாக, சென்னையிலிருந்து புறப்பட்டு இந்திய எல்லையில் கப்பல் ஏறும் இடம்வரை செல்ல போட்மெயில் என்றும் ந்தோ சிலோன் எக்ஸ்பிரஸ் என்றும் சொல்லப்படும் இரயில் 1915-இல் விடப் பெற்றது. இது இப்போது சென்னை இராமேசுவரம் எக்ஸ்பிரஸ்' என்று பெயர் பெற்றிருக்கிறது. தைப்போலவே இலங்கை அரசின் இரயில் தலைமன்னாரிலிருந்து கொழும்புக் கோட்டைக்குச் செல்லு கிறது. இதற்கு இந்தியா கோச்" என்று பெயர். தீவுப்பகுதியில் இரயில் போக்கு வரத்து: . இரமேசுவரம் தீவில் இரயில் பாதையைப் பேணுவது தென் இரயில்வேயின் முக்கியமான தொல்லையாக இருந்து வருகிறது. பாதைகளை மணல் மூடிவிடாமல் இருப்பதற்காகப் பெரும் பணம் செலவு செய்கிறார்கள்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/128
Appearance